என்னு நின்டே மொய்தீன்.( 2015 )
மலையாளம்.
1960-70 காலகட்டத்தில் கேரளாவின் முக்கம் என்ற இடத்தில் வாழ்ந்த கொட்டட்டில் காஞ்சனமாலாவுக்கும்,
பால்யாம்பர பொட்டட்டு மொய்தீனுக்கும் இடையில் இருந்த உயிர் காதலும் அந்த காதல் சார்ந்த வாழ்வியலும், முடிவற்ற காத்திருப்பின் பெருவலியும்,தியாகமும் தான் என்னு நின்டே மொய்தீன்!!
டாக்டருக்கு படிக்கும் காஞ்சனவுக்கும்,கம்யூனிஸ்ட் போராளியான மொய்தீனுக்கும் காதல். இருவருமே பெரும் பேர் பெற்ற வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஹிந்து முஸ்லீம் கலப்பு திருமணம் எல்லாம் அத்தனை சுலபமில்லாத அந்த காலகட்டத்தில் இருவீட்டில் இருந்தும் கடும் எதிர்ப்பு. காஞ்சனா சொந்த வீட்டில் சிறைவைக்க பட, மொய்தீன் தன் வீட்டில் இருந்து தந்தையால் வெளியேற்ற படுகிறார். நிறைய அடி வலி வேதனை எல்லாம் கடந்தும் இருவரும் காதல் மாறாமல் குறையாமல் திடமாக இருக்கிறார்கள். உடன் பிறந்த அத்தனை சகோதரிகளுக்கும் திருமணம் கழிந்து குழந்தை குட்டி என ஆன பின்னும் மொய்தீனை மட்டுமே திருமணம் செய்வேன் என 22 வருடங்கள் காத்திருக்கும் காஞ்சனா.. வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருந்தாலும் கொண்ட காதலுக்காக தகப்பனை எதிர்த்து வீடு சுற்றம் சொத்து எல்லாம் விட்டு கஞ்சனாவுக்காக காத்திருக்கும் மொய்தீன்..
வீட்டில் கட்டாயப்படுத்தி வேறொரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய,நான் மொய்தீன் உடையவள்,மற்றவனை மணக்க முடியாது என சொல்லி விதவை கோலம் பூணும் காஞ்சனாவை எனக்கு அவ்வளவு பிடித்து போனது!!
இளமை முழுதும் காத்திருப்போடும் காதலோடும் வாழ்கிறார்கள்.. காதலை பகிர அவர்க்கு இருக்கும் ஒரே வழி கடிதம் மட்டுமே.. காதலை,காத்திருப்பின் வலியை,கண்ணீரை,ஏக்கத்தை கடிதத்தின் வாயிலாக பகிர்கிறார்கள்.. அவர்கள் இருவருக்கு மட்டும் புரியும் படி ஒரு புது மொழியே உருவாக்கி கொள்ளும் அளவுக்கு தீர்க்கமான காதலும் கடித பரிமாற்றமும்..
காஞ்சனாவும் மொய்தீனும் இளமையாக இருக்கும் பருவத்தில் கொண்டாட்டமும் குதூகலமுமாக ஆரம்பிக்கும் காதல், வருடம் செல்ல செல்ல அவர்களோடு சேர்ந்து நம்மையும்பெரும் பாரமாய் அழுத்த தொடங்கும்..
அதிலும் ஸ்ரேயா கோஷல் குரலில் “காத்திருன்னு காத்திருன்னு” என்று பாடல் உருக ஆரம்பித்து, மொய்தீன் கண்ணாடியில் தன் முன்நெற்றி நரையை பார்த்து வேதனையாக சிரிக்கும் பொழுது.. கண்டிப்பாக மனம் கலங்கி கண்ணீர் வரும்.That was so touching!!
அத்தனை வருட காத்திருப்புக்கு பின் இருவரும் சந்திக்கும் பொழுது,மொய்தீனை பார்த்து கலங்கி காலில் விழப்போகும் காஞ்சனாவை தாங்கி பிடித்து இன்னும் எதற்கடி இந்த காத்திருப்பு,யாருக்காக என்று மொய்தீன் கேட்கும் அந்த இடம்!! Epic!!
இருவஞ்சிபுழா ஆற்றின் கரையில் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு தருணமும் ஒரு கவிதை!!
இறுதியாக வீட்டை விட்டு வந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து படகில் கிளம்பும் பொழுது,
காஞ்சனாவின் காலடி மண்ணெடுத்து கைக்குள் வைத்துக்கொண்டு சிரிக்கும் மொய்தீன்… அடுத்த சில மணியில் கத்தியில் குத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் பொழுதும் கைக்குள் இருக்கும் அந்த மண்ணை விடாது பிடித்திருக்க செய்கிறது அவனுடைய அந்த உயிர் பிரியம்!!
தன்னை கத்தியால் குத்திய சொந்த அப்பாவை மன்னித்து, கோர்ட்டில் வைத்து அவரிடம், “பரவாயில்லப்பா,ஒன்னும் பிரச்னை இல்லை” என்று சொல்லும் அளவுக்கு பெருங்கருணையை மொய்தீனுக்கு கொடுக்கிறது அவன் காதல்..
மொய்தீனை காதலிக்கும் காஞ்சனாவை ஒருதலையாக காதலிக்கும் அப்பு,22 வருடங்கள் அவனும் திருமணம் செய்யாமல் காத்திருந்து,ஒரு கட்டத்தில் அவளை வீட்டில் பெண் பார்க்க வரும் பொழுது,நினைவு தெரிந்த வயது முதல் உன்னை மட்டுமே நேசிக்கிறேன் காஞ்சி என்று சொல்ல, நீ என்னை நேசிப்பதை விட ஆயிரம் மடங்கு அதிகமாக மொய்தீனை நான் நேசிக்கிறேன் அப்பு, அதை விட பதினாயிரம் முறை அதிகமாக மொய்தீன் என்னை நேசிக்கிறான்,இன்னும் ஆயிரம் வருடம் இதே போல இந்த வீட்டுக்குள் சிறைப்பட்டு கிடக்க வேண்டுமானால் கூட என் மொய்தீனுக்காக நான் செய்வேன்.. என்றென்றும் நான் மொய்தீன் உடையவள் என்று கதறும் காஞ்சனாவை அத்தனை வலிமையானவளாக ஆக்குகிறது அவள் காதல்!!
மொய்தீனும் காஞ்சனாவும் வீடு விட்டு சென்று சுற்றம் துறந்து மதம் மறந்து புது வாழ்வு வாழ முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் விதி ஒவ்வொரு விதமாக விளையாட.,அவர்களின் காத்திருப்பு காலம் நீண்டு கொண்டே போகிறது. கடக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதல் சுமந்து கண்ணீரோடு காத்திருக்கிறார்கள். முடிவில் இருவரின் காதலும் காத்திருப்பும் என்ன ஆனது.? சேர்ந்தர்களா இல்லையா என்பது கண்ணீரும் காதலும் தாய் பாசமுமாக ஒரு நெகிழ்ச்சியான முடிவு!
“மொய்தீன் கொடுக்கும் சொல் தான் சத்தியம்!! நீ என்றென்றும் என்னுடையவள் காஞ்சனா!!”
“உயிரே போகும் நிலை வந்தாலும் கூட பரவாயில்லை,காஞ்சனா மொய்தீன் உடையவள்.,அதில் மாற்றமில்லை!!” என்று வார்த்தைக்கு வார்த்தை கண்ணில் காதல் கொண்டு பேசும் மொய்தீனாக பிருத்விராஜ்!! such a soulful performance!!
நினைக்கும் பொழுதெல்லாம் மழை பெய்யும் அழகான அந்த ஊரைப் போலவே பேரழகாக காஞ்சனா..22வருடம் இந்த பெண்ணுக்காக இரு ஆண்கள் இளமை தொலைத்து காத்திருந்தார்கள் என சொன்னால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளலாம்!! காதல்,வெட்கம்,வேதனை,ஏக்கம்,கண்ணீர், என அத்தனையும் விழி வழியாக சொல்லும் அழகு காஞ்சனாவாக பார்வதி!! No one can portray this character as beautiful and perfect as she did!!
தன்னை காதலிக்காத ஒரு பெண்ணுக்காக,தொலைக்க முடியாத காதலோடு காத்திருக்கும் அப்புவாக டொவினோ தாமஸ்!!
எத்தனை வருடங்கள் ஆனாலும் தன் பிரியமுள்ள தங்கை காஞ்சனாவுக்கு மணமுடிக்காமல் தானும் திருமணம் செய்வதில்லை என உறுதியாக நிற்கும் அண்ணன் சேது மாதவனாக பாலா!!
மொய்தீனின் காதலை பேரன்போடும் பெருமையோடும் ஏற்றுக்கொள்ளும் தாய் பாத்தும்மாவாக லேனா!!
இன்னும் மொய்தீனின் பெருங்கோபக்கார அப்பா உன்னி மொய்தீன் சாஹிப் ஆக சாய்குமார் ,காஞ்சனாவின் அம்மா அப்பா அக்கா தங்கைகள் வேலைக்கார பெண் என ஒவ்வொரு பாத்திர படைப்பும் அவ்வளவு கச்சிதம்!!
படத்தின் மற்றொரு முக்கிய நாயகன் இசை! M.Jayachandran,Gopi Sundar and Ramesh Narayan Musical!!
“எண்டே கிதாபிண்டே பெண்ணே” என்று உருகும் பாடலிலும்.,மொய்தீனும் காஞ்சனாவும் சந்திக்கும் பொழுதெல்லாம் பின்னணியில் இசைக்கும் அந்த சாக்ஸோஃபோன் இசையும்!!! கொல்லும் classic!! That’s why they triumphed the National Award for Music!!👏👏
காதல்.. காதலை மட்டுமே சொல்லி கொண்டாடும் ஒரு படம்!! பார்த்தால் மனம் நெகிழ்ந்து பல நாட்கள் அதன் தாக்கம் உணர முடியும்!!♥️
.



