HomeCinema NewsUPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED will release Arun Vijay's movie “Thadaiyarath Thaka”

UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED will release Arun Vijay’s movie “Thadaiyarath Thaka”

-

UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED வெளியிடும், அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” திரைப்படம் !

மீண்டும் திரைக்கு வருகிறது !
அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், 2012 ஆம் ஆண்டு வெளியான படம் “தடையறத் தாக்க”.

இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். எல். ஆர் ஈஸ்வரி பாடிய ” பூந்தமல்லி டா ” பாடல் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

திரில்லர் ஜானரில் மைல்கல்லாக இன்றளவும் கொண்டாடப்படும் இப்படத்தினை, UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடுகிறது.

இந்திய அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த படம் தடையறத் தாக்க. இப்படம் நடிகர் அருண் விஜய் திரைவாழ்வில், மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் ஏற்படுத்தி தந்தது.

இந்த படம் தான், இயக்குநர் மகிழ் திருமேனியின் அடையாளமாக அமைந்து இன்று நடிகர் அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை இயக்கும் அளவிற்கான வாய்ப்பையும் பெற்றுத்தந்தது.

வாழ்க்கையில் கஷ்டபட்டு ஒரு நல்ல நிலைக்கு முன்னேறிய இளைஞன், ஒரு சிறு உதவி செய்யபோக, மிகப்பெரிய ரௌடிகளின் கூட்டத்திடம் மாட்டிக் கொள்கிறான். அவன் அந்த ரௌடிகளிடமிருந்து தப்பினானா என்பது தான் இந்தப்படத்தின் கதை. இசையமைப்பாளர் தமனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பைக் குவித்தது.

ஒரு ஆக்சன் படத்தின் மொத்த இலக்கணங்களை மாற்றியமைத்து, ரசிகர்களை இறுதிவரை இருக்கை நுனியில் அமர வைத்த இப்படம், திரைக்கு வந்தபோதே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்போதும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆக்சன் கிளாசிக்காக கொண்டாடப்படுகிறது.

இப்படம் தற்போது நவீன ஏஐ தொழில் நுட்பத்தில் முழுப்படமும் மெருக்கேற்றப்பட்டு, 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன், புதிய டிஜிட்டல் பதிப்பாக, UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

PRO BHUVAN SELVARAJ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

APPAKUTTY MOVIE REVIEW

மனைவியை இழந்த விஜய் ஆண்டனி, தன் மகளுடன் ஊட்டியில் வசித்து வருகிறார். அவர் மகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியை பிரித்தி அஸ்ராணி விஜய் ஆண்டனியை ஒருதலையாக காதலிப்பதோடு, அவரது மகள் மீதும் அதிக அக்கறை...

‘Ira Iragaaga’, the Second Single from K. Manikandan-starrer Makkal Kaavalan, Out Now!

நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு! தமிழ்த் திரையிசையுலகில் தனித்துவமான இசையமைப்பாளராகத் திகழும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ள மனதைத் தொடும் 'இற இறகாக..' எனத் தொடங்கும்...

National Award-Winning Soldiers Factory Joins Hands with Redacted Studios for a New Telugu – Tamil Romantic Entertainer!

தேசிய விருது பெற்ற சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் – ரெடாக்டட் ஸ்டுடியோஸுடன் இணைந்து தெலுங்கு - தமிழில் உருவாகும் புதிய காதல் திரைப்படம்! தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘MAD’ மற்றும் ‘MAD Square’ திரைப்படங்களின்...

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு!

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு! புதுமணத் தம்பதிகளின் காதல், ரொமான்ஸ் மற்றும் அழகான இல்லற வாழ்க்கையை மெலடியாகச் சொல்லும் பாடல்! நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா....

Most Popular

spot_img