HomeCinema NewsAPPAKUTTY MOVIE REVIEW

APPAKUTTY MOVIE REVIEW

-

மனைவியை இழந்த விஜய் ஆண்டனி, தன் மகளுடன் ஊட்டியில் வசித்து வருகிறார். அவர் மகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியை பிரித்தி அஸ்ராணி விஜய் ஆண்டனியை ஒருதலையாக காதலிப்பதோடு, அவரது மகள் மீதும் அதிக அக்கறை காட்டுகிறார்.

இதற்கிடையே, விஜய் ஆண்டனி இறந்ததாக சொல்லும் அவரது மனைவியை பிரித்தி அஸ்ராணி ஊட்டியில் கணவர், குழந்தை என்று குடும்பமாக பார்க்கிறார். இதை விஜய் ஆண்டனியிடம் தெரிவிப்பதோடு, குழந்தையிடம் பொய் சொன்னதற்காக வருத்தப்படுகிறார்.

இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் மகளுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மரபணு இரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுமியின் நிலை மிக மோசமாக இருப்பதாகவும், அவருக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை) செய்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும், என்று சொல்கிறார்கள்.

இதனால் விஜய் ஆண்டனியும், அவரது மனைவியும் இணைந்து மீண்டும் ஒரு குழந்தை பெற்றெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட, அப்போது தான் தெரிகிறது விஜய் ஆண்டனிக்கு திருமணமே ஆகவில்லை என்று. அதோடு, அந்த குழந்தை ஆதரவற்ற குழந்தை என்ற உண்மையும் தெரிய வருகிறது. .

சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்றால், அவரது உண்மையான பெற்றோர்கள் நினைத்தால் மட்டுமே முடியும் என்ற நிலையில், அவர்களை தேடி செல்லும் விஜய் ஆண்டனி, அவர்கள் மூலம் தன் வளர்ப்பு மகளை காப்பாற்றினாரா ? , திருமணமே ஆகாத விஜய் ஆண்டனியிடம் கைக்குழந்தை வந்தது எப்படி ?, இறந்ததாக சொன்ன அவரது மனைவி யார் ? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அப்பா குட்டி’ படத்தின் கதை.

பல வருடங்களுக்கு முன்பு வட இந்தியாவில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து, பல கற்பனை கிளைக்கதைகளை சேர்த்து வெள்ளித்திரையில் சின்னத்திரை தொடரை அரங்கேற்றியிருக்கிறார் இயக்குநர் மு.மாறன்.

ஒரு காலத்தில் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்காக குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஸ்டெம் செல்கள் பெறப்பட்டன. ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொருத்தமான நன்கொடையாளரிடமிருந்து ஸ்டெம் செல்கள் பெறப்படுகிறது. இதற்காக சில தனியார் அமைப்புகள் ஸ்டெம் செல் வங்கிகளையும் நடத்தி வரும் நிலையில், அத்தகைய தகவல்கள் எதையும் சொல்லாமல், பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் மு.மாறன், பழைய பாணியில் படத்தை நகர்த்தி பார்வையாளர்களை பதம் பார்த்து விடுகிறார்.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி வழக்கம் போல் பாவப்பட்ட மனிதராக வலம் வருகிறார். தன் மகள் மீது அவர் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட காட்சிகள் செயற்கைத்தனமாக இருப்பதோடு, அதில் விஜய் ஆண்டனி வெளிப்படுத்திய நடிப்பு அதைவிட செயற்கைத்தனமாக இருக்கிறது.

பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் பிரித்தி அஸ்ரானிக்கு விஜய் ஆண்டனி மீது காதல் வருவதற்கான எந்தவித அழுத்தமான காரணமும் இல்லாததால், அவரது காதல் மற்றும் சிறுமி மீதான அக்கறை திரைக்கதையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே, பிரித்தி அஸ்ராணியின் நடிப்பும் படம் பார்ப்பவர்களை பாதிக்கவில்லை.

விஜய் ஆண்டனியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி லிதன்யா, எதார்த்தமான நடிப்பாலும், குறும்புத்தனமான பேச்சாலும் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, கிளைமாக்ஸில் அவரது சுமார் இரண்டு நிமிட காட்சி ஒன்று மட்டுமே ஒட்டு மொத்த படத்தையும் தாங்கிப்பிடிக்கிறது.

பகவதி பெருமாள், முத்துக்குமார், அருவி மதன், ஹரிப்பிரியா இசை, ஸ்ரீஜா ரவி, குமார் நடராஜன், பிரவீனா, லிஸி ஆண்டனி, சித்ரா லக்‌ஷ்மணன், மூணாறு ரமேஷ், ஜென்சன் திவாகர், ஹரிதா முத்தரசன், முருகாந்தம்.ஆர் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன் காட்சிகளை அழகாக காட்டுவதை விட, கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் கடத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும், திரும்ப திரும்ப கேட்கும் வகையிலும் உள்ளது. பின்னணி இசையும் அளவாக பயணித்து காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.

படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கும் விஜய் ஆண்டனி, நேர்த்தியாக காட்சிகளை தொகுத்து இயக்குநரின் கதையை சரியான முறையில் விவரித்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் மு.மாறன், மருத்துவத் துறையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு அப்பா – மகள் இடையிலான பாசப் போரட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது முயற்சியும், எழுதிய காட்சிகளும் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஒட்டாமல் பயணிப்பது படத்தின் பலவீனம்.

பிக்பாக்கெட் திருடராக இருக்கும் ஜென்சன் திவாகர், ஊட்டியில் விஜய் ஆண்டனிக்கு அறிமுகம் காட்சியை மட்டும் அல்ல பிக்பாக்கெட் அடிப்பதையே திருடர்கள் மறந்து போன சூழலில், அத்தகைய பழையக் காட்சியை இன்னும் மறக்காமல் நினைவு வைத்திருக்கும் இயக்குநர் மு.மாறன், இதுபோல் பல பழைய காட்சிகள் மூலம் படத்தை நகர்த்தி பார்வையாளர்களின் பொறுமையை பெரிதும் சோதித்திருக்கிறார்.

இயக்குநர் மு.மாறனின் பழமைத்தனம் மிக்க எழுத்து ஒருபக்கம் அடித்து துவைக்க, மறுபக்கம் அப்பா விஜய் ஆண்டனியின் நடிப்ப கதற வைக்கிறது. இப்படி இருவரும் படம் முழுவதும் தங்களது சரியான சம்பவம் மூலம் பார்வையாளர்களை பந்தாடிக் கொண்டிருக்க, ஒட்டு மொத்த படத்தால் அடிபட்டு வலியால் துடிக்கும் பார்வையாளர்களுக்கு கிளைமாக்ஸில் சிறுமி லிதன்யாவின் ஒரு காட்சி மட்டும் சற்று ஆறுதல் அளிக்கிறது.

மொத்தத்தில், ‘அப்பா குட்டி’ அழுத்தம் இல்லை.

RATINGS : 2/5

PRO : REKHA

LATEST POSTS

SATHYAVAAN SAVITHRI MOVIE REVIEW

கீர்த்தி சுரேஷ் நீண்ட நாட்கள் பிறகு சோலோ ஹீரோயினாக ப்ரவீன் இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள இந்த சத்தியவான் சாவித்திரி Review : கீர்த்தி சுரேஷ் லா படித்துவிட்டு மார்கெண்டயன்(மிஷ்கின்) என்ற பெரிய லாயரிடம் உதவியாளராக பணிபுரிய...

‘Ira Iragaaga’, the Second Single from K. Manikandan-starrer Makkal Kaavalan, Out Now!

நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு! தமிழ்த் திரையிசையுலகில் தனித்துவமான இசையமைப்பாளராகத் திகழும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ள மனதைத் தொடும் 'இற இறகாக..' எனத் தொடங்கும்...

National Award-Winning Soldiers Factory Joins Hands with Redacted Studios for a New Telugu – Tamil Romantic Entertainer!

தேசிய விருது பெற்ற சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் – ரெடாக்டட் ஸ்டுடியோஸுடன் இணைந்து தெலுங்கு - தமிழில் உருவாகும் புதிய காதல் திரைப்படம்! தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘MAD’ மற்றும் ‘MAD Square’ திரைப்படங்களின்...

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு!

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு! புதுமணத் தம்பதிகளின் காதல், ரொமான்ஸ் மற்றும் அழகான இல்லற வாழ்க்கையை மெலடியாகச் சொல்லும் பாடல்! நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா....

Most Popular

spot_img