Demonte Colony 2 Movie Review

Demonte Colony 2 Movie Review in Tamil : 2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் இன்று வெளியாகியுள்ளது. அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் விரிவான விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகம் அமைந்துள்ளது. கதாநாயகன் ஸ்ரீனிவாசன் இறப்பதுபோல் காண்பிக்கப்பட்டு இருக்கும். ஆனால், ஸ்ரீனிவாசன் இறக்காமல் இருப்பதே இந்த பாகத்திற்கான ஓபனிங். அவரை யார் காப்பாற்றினார்கள் ? , எதற்காக காப்பாற்றினார்கள் ? , டிமான்டிக்கும் முதல் பாகத்தில் வந்த செயினிற்கும் என்ன ஆனது என்பதையே இரண்டாம் பாகமாக விவரித்துள்ளனர்.

புது முயற்சி :

அழகான மோகினிகள், சிரிப்பூட்டும் பேய்கள், பழிவாங்குவதற்காக பிளாஷ் பேக்கில் நடந்த மோசமான சம்பவம், இடையில் சம்பந்தமில்லாமல் பாடல் அதற்கு ஒரு டான்ஸ் என இவற்றைதான் இவ்வளவு காலமாக தமிழ் சினிமா பேய் படமாக காட்டி வந்தது.

டிமான்டி 2 படம், சற்று மாறுப்பட்டதாகவே இருந்தது. 15 ஆம் நூற்றாண்டில் நடந்த ஏதோ ஒரு பிரச்சனைதான் இப்போது நடக்கும் அனைத்தும் விஷயங்களுக்கு காரணமாக இருக்கிறது. அதை சஸ்பென்ஸாக வைத்து, அடுத்து என்ன ?

முதல் பாகத்தை போல் இந்த பாகமும் நம் மனதில் பல்வேறு கேள்விகளை விட்டு செல்கிறது. அதற்கான பதில் அடுத்த பாகத்தில் கிடைக்கும் என்பதையும் படத்தின் க்ளைமாக்ஸில் காட்டிவிட்டு படத்தை முடித்துவிட்டனர்.

தியேட்டரில் பார்க்கலாமா?

தொடர் விடுமுறை நாளில் வெளியாகியுள்ள இந்த ஹாரர் திரில்லர் படம் அனைத்து வகையான ரசிகர்களையும் நிச்சயம் ஈர்க்கும். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் யார் வேண்டுமானலும் படத்தை பார்க்கலாம். திக் திக் காட்சிகளை பார்த்து அலறுபவர்கள் இதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

Ratings : 2/5

Leave a Response