Ottha Vottu Muthaiyaa Movie Review

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ஒத்த ஓட்டு முத்தையா படம் எப்படி இருக்கு என்பது குறித்து விமர்சனம் :

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் தான் கவுண்டமணி. 85 வயதிலும் தற்போது ஹீரோவாக நடித்துள்ளார். அதன்படி தற்போது அவர் நடித்த ஒத்த ஓட்டு முத்தையா இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒத்த ஓட்டு முத்தையா படத்தை இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கி இருந்தார். சித்தார்த் விபின் இசையமைத்திருந்தார்.

மேலும்,  மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வையாப்புரி, சந்தனபாரதி மற்றும் சிங்கம் முத்து ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள இந்த திரைப்படம், எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாக இருக்கும் முத்தையா ஒரு தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைகிறார். அதையும் பொருட்படுத்தாமல் முத்தையா மீண்டும் போட்டியில் பங்கேற்று எல்லா சவால்களை எதிர்த்து, எம் எல் ஏ (உயர்த் தேர்தல் உறுப்பினர்) ஆக வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.

PRO : NIKIL MURUGAN

Ratings : 2.5/5

 

 

Leave a Response