HomeCinema Newsஅர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

-

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

கதாப்பாத்திரங்கள் நிறைந்த மர்மமான போஸ்டர்… வெளியீட்டுத் தேதியுடன் களமிறங்கும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அசத்தலான ஒரு போஸ்டர் மூலம்  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த போஸ்டர், மர்மம் நிறைந்த கிரைம் திரில்லர் கதைக்களத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு வண்ணப் பின்னணியில், காவலர் சீருடையில் இருக்கும் அர்ஜுன் தாஸின் தோற்றம் மையமாக இடம்பெற்றுள்ளது. அவரைச் சுற்றிலும் பல்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணையுடன் தொடர்புடைய தடயங்களை நினைவூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கதாபாத்திரங்களின் முகபாவனைகளும், ஒன்றோடொன்று தொடர்புடையது போன்ற புகைப்படங்களின் தொகுப்பும் படத்தின் பின்னணியில் இருக்கும் மர்ம முடிச்சுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. ‘ஜான் டோ’ என்ற தலைப்புடன் நவம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ் (Arka Mediaworks) நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்ட  (Shobu Yarlagadda), பிரசாத் தேவினேனி ( Prasad Devineni) ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் ( Nicholas Chevaillier) இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

படத்திற்கு பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 (Artist 404) கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. படத்தொகுப்பை விஜய் வெங்கடரமணன் கவனித்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றியுள்ளார்.

“ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா அல்லது காணாமல் போன குழந்தையா? என்பதைச் சுற்றி இப்படத்தின் கதை நகர்கிறது. சந்துரு உண்மையைத் தேடிப் பயணிக்கும்போது, ஜான் டோவைப் பற்றிய உண்மையை யாரும் எதிர்கொள்ளத் தயாராக இல்லையென்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.”

அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. போஸ்டரில் காவலர் சீருடையில் அவர் தோன்றியிருப்பதும், மர்மம் நிறைந்த கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதும் படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு, அர்ஜுன் தாஸின் வித்தியாசமான கதாபாத்திரம், மதுமிதாவின் இயக்கம் எனப் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படம், நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

LATEST POSTS

Future Runup Films Acquires South Indian Distribution Rights for Regin S. Babu’s Mystery Thriller ‘Bouma’ and Amal Neerad’s Action-Crime Drama ‘Deux’ Following the Success...

பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து, ரெஜின் எஸ். பாபுவின் மிஸ்டரி-த்ரில்லர் 'பௌமா' மற்றும் அமல் நீரதின் ஆக்ஷன்-க்ரைம் டிராமா 'டூக்ஸ்' ஆகிய படங்களை தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் 'பெத்லகேம்...

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள்

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!* *நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!* தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப்...

பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங்’

பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் 'பேங் பேங் – Bang Bang' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues)...

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்

*நடிகர் நாகார்ஜுனாவின் 'கிங் 100 - King 100' திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் 'கர்ணா - Karna' கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!* 'கிங் 100 - King 100' திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா ...

Most Popular

spot_img