HomeCinema Newsபுற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!*

-

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!*

லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியை சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்!

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநரும் திரைப்படத்  தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பாட்டிக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டதை நேரில் பார்த்ததாகக் குறிப்பிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முடி இழப்பால் எதிர்கொள்ளும் சிரமங்களை தன்னால் உணர முடிவதாகவும், அவர்களுக்கு உதவும் வகையில் முடிதானம் செய்வது மிகவும் வரவேற்கத்தக்க செயல் என்றும் தெரிவித்தார்.

மேலும், சமூக வலைதளங்களை நல்ல செயல்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சமூக நலன் சார்ந்த நிகழ்வுகளை அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு தன்னால் முடிந்த ஆதரவையும் வழங்குவேன் என சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

LATEST POSTS

Future Runup Films Acquires South Indian Distribution Rights for Regin S. Babu’s Mystery Thriller ‘Bouma’ and Amal Neerad’s Action-Crime Drama ‘Deux’ Following the Success...

பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து, ரெஜின் எஸ். பாபுவின் மிஸ்டரி-த்ரில்லர் 'பௌமா' மற்றும் அமல் நீரதின் ஆக்ஷன்-க்ரைம் டிராமா 'டூக்ஸ்' ஆகிய படங்களை தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் 'பெத்லகேம்...

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள்

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!* *நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!* தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப்...

பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங்’

பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் 'பேங் பேங் – Bang Bang' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues)...

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்

*நடிகர் நாகார்ஜுனாவின் 'கிங் 100 - King 100' திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் 'கர்ணா - Karna' கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!* 'கிங் 100 - King 100' திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா ...

Most Popular

spot_img