HomeCinema NewsOM MOVIE REVIEW

OM MOVIE REVIEW

-

செம்மரம் மாஃபியாவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, அதன் முக்கிய தலைவரான துபாயில் இருக்கும் நஸ்ரூதின் ஷா உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் புதிய ஆந்திர மாநில அரசு, அதற்காக ஐபிஎஸ் அதிகாரி சாய் பல்லவி தலைமையில் சிறப்பு படை அமைக்கிறது.

சாய் பல்லவியின் சிறப்பு படையை சேர்ந்த, தமிழக காவல்துறையின் சிறப்பு புலனாய்வு அதிகாரி தனுஷ், தமிழகத்தில் இருக்கும் செம்மரம் மாஃபியாவைச் சேர்ந்த மம்மூட்டி கூட்டத்தில் இணைந்து, அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். ஆனால், மம்மூட்டி குறுகிய நாட்களிலேயே தனுஷ் மீது பெரும் நம்பிக்கை வைப்பதோடு, அவரை தனது தம்பியாக பார்க்கிறார்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் செம்மரம் கடத்தல் தடுப்பு படை போலீஸார், அப்பாவி தமிழக கூலித்தொழிலாளர்களை என்கவுண்டர்கள் செய்கிறார்கள். லாரி ஓட்டுநராக சென்ற தனுஷின் தந்தையும் இந்த என்கவுண்டரில் கொலை செய்யப்படுகிறார். இதன் பிறகு, இந்த கடத்தல் தொழிலால், பாதிக்கப்படும் அப்பாவி தமிழக கூலித்தொழிலாளிகள் பற்றி அறிந்துக் கொள்ளும் தனுஷ், இந்த மாஃபியாவை முழுவதுமாக அழிப்பதோடு, பாதிக்கப்பட்ட தமிழகர்களை மீட்பதற்கான முயற்சியிலும் ஈடுபடுபவர், அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா ? என்பதை உண்மை சம்பவங்களுக்கு நெருக்கமாக சொல்வதே ‘ஓம்’.

செம்மரம் மாஃபியாவை அழிப்பதற்கான சிறப்பு படை செயல்படுத்தும் ரகசிய திட்டத்திற்கு ‘ஆபரேஷன் மோல்’ (Operation Mole) என்று பெயர் வைக்கப்படுகிறது. இதன் சுருக்கமான ‘O.M’ என்பது தான் படத்தின் தலைப்பு. ஆனால், தமிழில் ‘ஓம்’ என்ற வார்த்தைக்கும் கதைக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.

தனுஷ் தன் வயதை கண்டுபிடிக்க முடியாதபடி உடலளவில் இளமையாக இருப்பதோடு, துடிப்பான நடிப்பு, ஆரவாரமான நடனம் என்று பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறார். காவல்துறை உளவானி மற்றும் கடத்தல் கும்பலின் நம்பிக்கைக்குறிய இளைஞர் என்று இரு வேறு முகங்களை தனது நடிப்பின் மூலம் சிறப்பாக வேறுபடுத்தி காட்டியிருக்கும் தனுஷ், செண்டிமெண்ட் காட்சிகளில் வழக்கம் போல் ஸ்கோர் செய்திருக்கிறார்.

செம்மரம் கடத்தலில் ஈடுபட்டிருப்பவராக நடித்திருக்கும் மம்மூட்டியின் முதிர்ச்சியான நடிப்பு மற்றும் திரை இருப்பு படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. குறிப்பாக செம்மரம் கடத்தல் தொழில் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியலைப் பற்றி பேசியிருக்கும் மம்மூட்டியின் கதாபாத்திரம், அதன் முலம் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்காக குரல் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறது.

ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சாய் பல்லவி, தனிப்பட்ட இழப்புகளை தாண்டி, ஒரு காவல்துறை அதிகாரியாக என்ன செய்ய வேண்டும், என்பதை மிக சரியான முறையில் தனது கதாபாத்திரம் மூலம் பிரதிபலித்திருக்கிறார். காவல்துறை உடையில் கம்பீரமாக வலம் வருவதோடு, அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை பார்த்து பதறும் காட்சியில், தன் இலகிய மனதை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தனுஷின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீலீலா, செம்மரம் மாஃபியாவின் தலைவர் நஸ்ரூதின் ஷா, இந்திரன்ஸ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கே.எழில் அரசு, திருவண்ணாமலையின் மலை கிராமங்கள் மற்றும் அம்மக்களின் வாழ்வியலை ஒருசில காட்சிகள் மூலம் மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்திருப்பவர், செம்மரம் வெட்டும் காட்டுப் பகுதி மற்றும் அந்த சூழல்களை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகமாகவும், ரசிகர்களை கொண்டாட வைக்கும் விதமாகவும் உள்ளது. பின்னணி இசை திரைக்கதையில் உள்ள பதட்டத்தை பார்வையாளர்களிடம் கடத்துவதோடு, மக்களின் வலிகளைப் பற்றி பேசும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு அளவான இசை உயிரூட்டியிருக்கிறது.

தனுஷ் சிறப்பு புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என்ற ரகசிய முடிச்சை கதையின் ஆரம்பத்திலேயே அவிழ்த்து விட்டாலும், அவர் எதிராளிகள் கூட்டத்தில் என்ன செய்யப்போகிறார், என்பதை சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன்.

தமிழக கூலித்தொழிலாளிகள் ஆந்திர மாநில போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக கொண்டு கதை எழுதி இயக்கியிருக்கும் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் ரசிகர்களை திருப்திப்படுத்தும் மாஸான காட்சிகளுடன், உண்மை சம்பவத்திற்கு நெருக்கமாகவும், அதே சமயம், தமிழக அப்பாவி கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

கமர்ஷியல் படம் என்றாலும், படத்தில் இடம்பெறும் காவல்துறை மற்றும் அரசியல் சார்ந்த காட்சிகளை நம்பகத்தன்மையுடன் படமாக்கியிருக்கும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிலரது பண பேராசையால் உருவான செம்மரம் கடத்தலால் அப்பாவி கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதோடு, காவல்துறை மற்றும் வனத்துறையினரும் இதற்காக தங்களது உயிரை தியாகம் செய்திருப்பதாக சொல்லி காவல்துறைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில், ஆந்திர போலீஸாரை விரட்டியடிக்கும் அதிரடி இளைஞராக தனுஷ் அறிமுகமானதும், வேகம் எடுக்கும் படம், அவர் காவல்துறையின் உளவாளி என்று தெரிந்ததும், பெரிய அளவில் விறுவிறுப்பு இல்லாமல் பயணிக்கிறது. குறிப்பாக தனுஷ் எதையும் கண்டுபிடிக்காமலயே, மம்மூட்டியாகவே அனைத்து ரகசியத்தையும் அவரிடம் சொல்வது, அதை வைத்து அடுத்தக் கட்டங்களை எளிதில் கடப்பது, போன்றவை லாஜிக் மீறலாக இருப்பதோடு, திரைக்கதையின் வேகத்தை குறைக்கவும் செய்கிறது.

இருந்தாலும், செம்மரம் கடத்தலை மையமாக கொண்டு வெளியான புஷ்பா படம் போல் தூக்கலான கமர்ஷியல் நெடியை தவிர்த்துவிட்டு, அதன் பின்னணியில் இருக்கும் உண்மைகளை பிரச்சாரம் தோணியில் பேசாமல், திரை மொழியின் மூலம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சிறப்பாகவே சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘ஓம்’ ஆபரேஷன் சக்சஸ்.

RATINGS : 4/5

PRO : AIM SATHISH

 

LATEST POSTS

AAGAYATHIL ORU THAARAGAI MOVIE REVIEW

துல்கர் சல்மான் மலையாள நடிகர் என்பதை தாண்டி தற்போது தெலுங்கு சினிமாவில் தான் கொடிகட்டி பறக்கிறார், அந்த வகையில் பவன் இயக்கத்தில் துல்கர், சாத்விகா நடிப்பில் வெளிவந்துள்ள தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் ஆன...

SATHYAVAAN SAVITHRI MOVIE REVIEW

கீர்த்தி சுரேஷ் நீண்ட நாட்கள் பிறகு சோலோ ஹீரோயினாக ப்ரவீன் இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள இந்த சத்தியவான் சாவித்திரி Review : கீர்த்தி சுரேஷ் லா படித்துவிட்டு மார்கெண்டயன்(மிஷ்கின்) என்ற பெரிய லாயரிடம் உதவியாளராக பணிபுரிய...

APPAKUTTY MOVIE REVIEW

மனைவியை இழந்த விஜய் ஆண்டனி, தன் மகளுடன் ஊட்டியில் வசித்து வருகிறார். அவர் மகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியை பிரித்தி அஸ்ராணி விஜய் ஆண்டனியை ஒருதலையாக காதலிப்பதோடு, அவரது மகள் மீதும் அதிக அக்கறை...

‘Ira Iragaaga’, the Second Single from K. Manikandan-starrer Makkal Kaavalan, Out Now!

நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு! தமிழ்த் திரையிசையுலகில் தனித்துவமான இசையமைப்பாளராகத் திகழும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ள மனதைத் தொடும் 'இற இறகாக..' எனத் தொடங்கும்...

Most Popular

spot_img