HomeCinema Newsஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு!

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு!

-

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு!

புதுமணத் தம்பதிகளின் காதல், ரொமான்ஸ் மற்றும் அழகான இல்லற வாழ்க்கையை மெலடியாகச் சொல்லும் பாடல்!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ எனும் இரண்டாவது பாடல் (Second Single) வெளியாகியுள்ளது.

மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு மோகன் ராஜன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். ஹரிசரண், சைந்தவி மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ முதல் பாடல் தந்தை – மகன் உறவின் அன்பையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ பாடல் கணவன் – மனைவி இடையிலான காதலையும் ரொமான்ஸையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

மென்மையான இசையுடன் அழகான மெலடியாக உருவாகியுள்ள இப்பாடல், புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கு இடையிலான காதல், நெருக்கம், ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் அன்பு மற்றும் அவர்களுடைய அழகான இல்லற வாழ்க்கையைப் பேசுகிறது. கணவன் – மனைவி இடையிலான ரொமான்ஸ் மற்றும் அன்பான நெருக்கத்தையும் அழகிய காட்சிகளின் வழியாக வெளிப்படுத்தும் இப்பாடல், எந்தவித விரசமும் இல்லாமல் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கதையின் முக்கியமான திருப்பங்களையும் கதாபாத்திரங்களின் வாழ்க்கைப் பயணத்தையும் பாடலின் காட்சிகளுக்குள்ளேயே சொல்லியிருப்பது இதன் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

கதையின் முக்கியத் திருப்புமுனையாகவும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் தொகுப்பாகவும் இப்பாடல் அமைந்துள்ளது. லாரி ஓட்டுநராக இருக்கும் நாயகனுக்கும், சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நாயகிக்கும் இடையே மலரும் காதலும், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கோயிலில் திருமணம் செய்துகொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்து வீட்டில் அவர்கள் தொடங்கும் புதிய வாழ்க்கையுமே இப்பாடலின் மையக்கருவாகும்.
புதுமணத் தம்பதிகளின் அன்றாட ரொமான்ஸ், கர்ப்பமடையும் மகிழ்ச்சியான தருணம் என அழகாக நகரும் அவர்களின் வாழ்க்கையில், நாயகியின் அம்மாவிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் ஏற்படுத்தும் மெல்லிய மாற்றங்களையும் இப்பாடல் சுவாரசியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. மேலும், படம் முடிவடைவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனம் மற்றும் OTT உரிமையை Zee5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் பாடல்  இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

LATEST POSTS

SATHYAVAAN SAVITHRI MOVIE REVIEW

கீர்த்தி சுரேஷ் நீண்ட நாட்கள் பிறகு சோலோ ஹீரோயினாக ப்ரவீன் இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள இந்த சத்தியவான் சாவித்திரி Review : கீர்த்தி சுரேஷ் லா படித்துவிட்டு மார்கெண்டயன்(மிஷ்கின்) என்ற பெரிய லாயரிடம் உதவியாளராக பணிபுரிய...

APPAKUTTY MOVIE REVIEW

மனைவியை இழந்த விஜய் ஆண்டனி, தன் மகளுடன் ஊட்டியில் வசித்து வருகிறார். அவர் மகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியை பிரித்தி அஸ்ராணி விஜய் ஆண்டனியை ஒருதலையாக காதலிப்பதோடு, அவரது மகள் மீதும் அதிக அக்கறை...

‘Ira Iragaaga’, the Second Single from K. Manikandan-starrer Makkal Kaavalan, Out Now!

நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு! தமிழ்த் திரையிசையுலகில் தனித்துவமான இசையமைப்பாளராகத் திகழும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ள மனதைத் தொடும் 'இற இறகாக..' எனத் தொடங்கும்...

National Award-Winning Soldiers Factory Joins Hands with Redacted Studios for a New Telugu – Tamil Romantic Entertainer!

தேசிய விருது பெற்ற சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் – ரெடாக்டட் ஸ்டுடியோஸுடன் இணைந்து தெலுங்கு - தமிழில் உருவாகும் புதிய காதல் திரைப்படம்! தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘MAD’ மற்றும் ‘MAD Square’ திரைப்படங்களின்...

Most Popular

spot_img