All pass Movie Review

வடசென்னை என்றாலே வன்முறை, பகை, அடிதடி என்று காட்டப்படும் சினிமா பிம்பத்திற்கு முற்றிலும் மாறாக, அங்குள்ள மக்களின் இயல்பான வாழ்க்கை, குடும்ப பாசம், நட்பு, சந்தோஷம், சின்னச் சின்ன சண்டைகள் என மனிதர்களின் உணர்வுகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறது ஆல் பாஸ்.

இயக்குநர் மைதீன் மிகவும் எளிமையான கதைக்களத்தின் மூலம், “வாழ்க்கையில் வரும் சோதனைகளை நாம் எப்படி ஒன்றாக எதிர்கொள்கிறோம்?” என்ற அழகான கருத்தை முன்வைத்திருக்கிறார்.

துஷ்யந்த் இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்களின் பங்களிப்பு படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. ஜனனியும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன் இசை படத்தின் உணர்வுகளை இன்னும் அழகாக உயர்த்துகிறது. குறிப்பாக குடும்ப உறவுகளையும் மனிதநேயத்தையும் மையப்படுத்திய காட்சிகளில் இசை மனதைத் தொடுகிறது.

மொத்தத்தில், வன்முறை இல்லாத வடசென்னையை அழகாகவும் இயல்பாகவும் காட்டியிருக்கும் ஒரு மனதிற்கு நெருக்கமான குடும்பப் படம் – ‘ஆல் பாஸ்’.

 பாசம் இருந்தால் எந்தச் சோதனையையும் கடக்கலாம்…

ஒற்றுமையாக இருந்தால் வாழ்க்கையே ‘ஆல் பாஸ்’!

RATINGS: 3/5

Pro : Bhuvan Selvaraj

ஆல்பாஸ்

தயாரிப்பு – ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment )
தயாரிப்பாளர் – மோகனா .ஆர்

நடிகர், நடிகைகள் :

துஷ்யந்த் ஜெயபிரகாஷ் -(கார்த்திக் )

ஜனனி – (பிரியா )

ஜெயப்பிரகாஷ் – (அழகர் )

செந்திகுமாரி ( சாந்தி )

இயக்குநர் சுப்பிரமணிய சிவா ( செல்வம் )

வினோதினி – ( லட்சுமி )

பிரசன்ன பாலச்சந்திரன்,-
( மாணிக்கம் )

மோகனா,ஆர் ( கீதா)

சத்யா – (கவுன்சிலர் கர்ணா)

சஞ்சய் – ( கதிர் )

கோகுல் – ( அருண் )

நிகில் – (மதன் )

சரத் லோகித்ஷவா – (எம் எல் ஏ ஆவுடையப்பன்)

ரோஷன் பஷீர் – ( பார்த்திபன்)
அருவி மதன்- (இன்ஸ்பெக்டர் வேலு)

இயக்குநர் மூர்த்தி (லோகு)

கலையரசன் கண்ணுசாமி ( கோபால்)

தொழில்நுட்ப கலைஞர்கள் :

‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’ , ‘தகராறு’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் .

பாடல்களை மோகன் ராஜன், நிலவை பார்த்திபன், ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

‘பசங்க’ படத்தின் படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார்.

பிரபல நடன இயக்குநர் I.ராதிகா நடனம் அமைத்துள்ளார்.

சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் மேற்கொண்டார்.

ஒப்பனை – எல்.வி.ராஜா,
உடைகள் – ஏ.எஸ்..வாசன்,
ஸ்டில்ஸ் – அண்ணாதுரை,
விளம்பர வடிவமைப்பு – கிப்சன் UGA,
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்,
தயாரிப்பு – மோகனா. ஆர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.

Leave a Response