மண்டாடி கடலையும், மீனவர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வீரத்தையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் ஒரு வித்தியாசமான முயற்சி ‘மண்டாடி’.
படகு பந்தயத்தை மையமாகக் கொண்ட கதைக்களம் படத்திற்கு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கிறது.
சூரி இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். கதாபாத்திரத்திற்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பும், உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் பாராட்டுக்குரியது.
வெளியான முதல் நாள் ரசிகர்களின் எதிர்வினைகளிலும் சூரியின் நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
கடலில் படமாக்கப்பட்டுள்ள படகு பந்தயக் காட்சிகள் திரையில் பிரம்மாண்டமாகவும் பரபரப்பாகவும் இருக்கின்றன.
குறிப்பாக ஆக்க்ஷன் காட்சிகளிலும் இடைவேளைப் பகுதியிலும் GV பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்தின் தாக்கத்தை அதிகரிக்கிறது.
சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்டவர்களின் பங்களிப்பும் கதைக்கு வலு சேர்க்கிறது.
மொத்தத்தில், வழக்கமான கதைக்களத்தைத் தாண்டி மீனவர்களின் வாழ்க்கை, கடல், போட்டி, உணர்வு, உறவுகள் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மண்டாடி, திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு அனுபவமாக அமைந்திருக்கிறது.
“கடலின் அலைகளில் தொடங்கி… மனித உணர்வுகளின் ஆழம் வரை பயணிக்கும் ஒரு மண்டாடி!”
RATINGS: 2/5
Pro : Rekha




