Heartin Movie Review

டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள படம் ‘ஹார்ட்டின்’ (Heartin). இதில் நாயகனாக சனந்த் நடிக்க, நாயகிகளாக மடோனா செபாஸ்டியன், இமயா.டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வாய்ஸப் மணி, டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார்.

ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் சமீபத்தில் சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் சாரதி பேசுகையில், ” ‘அயோத்தி’ படத்திற்குப் பிறகு அதே நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன். இரண்டுமே துள்ளலான பாடல்கள். வாய்ப்பளித்த இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. கடவுளை மறந்தாலும் காதலை மறக்காமல் இருக்க ஒரு மனம் வேண்டும் என்பதை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் கதை,” என்றார் .

நடிகர் வாட்ஸப் மணி பேசுகையில், ”இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. கல்லூரியில் படித்து முடித்த பிறகு 2014 -15களில் கிஷோர் குறும்படங்களை உருவாக்கும் போது எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் என்னுடைய பயணமும் தொடர்ந்தது. அதன் பிறகு இணைய தொடர், மியூசிக் ஆல்பம் ஆகியவற்றை இயக்கினார். தற்போது அவர் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நானும் நடித்து நடிகராக அறிமுகமாகிறேன். இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தின் கதையை எமோஷனலாக கிஷோர் நன்றாக எழுதியிருக்கிறார். இந்தப் படம் ஒரு பீல் குட் மூவியாக இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்,” என்றார்.

நடிகை டெப்னிதா கர் பேசுகையில், ”என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தை 26ம் தேதி முதல் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் வர்கீஸ் மேத்யூ பேசுகையில், ”இந்தப் படத்தில் காவல்துறை சீருடையில் நடிக்கவில்லை என்றாலும், பணக்கார அப்பாவாக நடித்திருக்கிறேன். ஆனால் அதிலும் சில சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. ஊறுகாயும், வத்தலையும் பார்சல் செய்து அனுப்புகிற அப்பாவாக நடித்திருக்கிறேன். இது எனக்கு வித்தியாசமானதாக இருந்தது, ரசிகர்களுக்கும் பிடிக்கும்,” என்றார்.

படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் பேசுகையில், ”ஹார்ட்டின் என்னுடைய ஃபேவரிட் படங்களில் ஒன்று. நான் இதில் பணியாற்றியதால் இப்படி சொல்லவில்லை. கடந்த வாரம் தான் நானும், இயக்குநரும் படத்தை முழுவதுமாக பார்த்தோம். ரேஸியான ஃபிலிமாக மட்டும் இல்லாமல், ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கக்கூடிய படமாக இருக்கிறது. இந்த படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் எழுதி இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமும்.. தனித்துவமும் இருக்கிறது. அதிலும் கதையில் இருக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கான எழுத்து ஆழமாக இருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்கள் இருக்கின்றன. அதனை ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமாக வித்தியாசப்படுத்தி காட்சிப்படுத்தி இருக்கிறார். இதனுடன் ராஜேஷ் முருகேசனின் இசையும் இணையும் போது ஒரு மேஜிக் நடந்துள்ளது. இந்த மேஜிக்கை திரையரங்குகளில் பார்க்கலாம்,” என்றார்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், ”இந்த மேடையில் நிற்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் அதிக சுதந்திரமாக பணியாற்றிய படம் இது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. இவற்றை பாடலாசிரியர்கள் சாரதி, விவேக், மோகன் ராஜன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இந்தப் படம் இளமையான படம். இதனை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடுங்கள்,” என்றார்.

நடிகை இமயா டி பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். முதல் படம் என்பதாலேயே இது எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தில் எனக்கும் என்னைப் போன்ற பல புது முகங்களுக்கும் நடிக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு நன்றி. இந்தப் படம் அழகானது. அனைவருடனும் எளிதாக தொடர்பு கொள்ளும் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் ஏதேனும் ஒரு விஷயம் உங்களை கவர்ந்து விடும்.

Ratings : 3.5/5

Pro : Nikil Murugan

Leave a Response