Kolaiseval Movie Review

படத்தின் கதை:

தமிழ் சினிமாவில் பல்வேறு கிராமப் பின்னணிகளை கொண்ட படங்கள் வெளியாகியிருந்தாலும் கொலைச் சேவல் அதிலிருந்து தனித்து நிற்கிறது.

தமிழகத்தில் நடக்கும், நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. துதிவாணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கொலைச் சேவல் ஒரு அழுத்தமான கருத்தை முன் வைத்துள்ளது.

திருவண்ணாமலையில் ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது. கலையரசன் மற்றும் தீபா பாலு கணவன் மனைவியாக உள்ளனர். தீபா பாலு ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார்.

காதல் திருமணம் செய்துள்ள இவர்கள், குடும்ப வழக்கப்படி ஊருக்கு வெளியே உள்ள மலைப்பகுதியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட செல்கின்றனர்.

போகும் வழியிலேயே நாயகி தீபா பாலுவிற்கு ஏதோ அசம்பாவிதம் ஏற்படப்போகிறது என்ற உள்ளுணர்வு ஏற்படுகிறது. இருப்பினும் குலதெய்வ வழிபாட்டை நிறுத்த கூடாது என்பதற்காக செல்கின்றனர்.

அங்கு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு திரும்பும் வழியில் ஒரு அசம்பாவித சம்பவம் ஏற்படுகிறது. அதன் பின்பு என்ன ஆனது என்பதே இந்த கொலைச் சேவல் படத்தின் கதை.

நடிகர்கள் நடிப்பு:

கதாநாயகனாக வரும் கலையரசன் மற்றும் நாயகி தீபா பாலு இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக நாயகி தீபா பாலு ஒரு கர்ப்பிணி பெண்ணாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மறுபுறம் கலையரசன் தனது அனுபவத்தின் மூலம் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரின் பெர்பாமன்ஸ் படத்தை தாங்கி பிடிக்கிறது.

கலையரசனின் நண்பனாக வரும் பால சரவணன் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். முதல் பாதையில் அவருடைய பிரசன்ஸ் தான் படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ்-ல் இதுவரை இல்லாத அளவில் நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளார் பால சரவணன். இவர்களை தாண்டி கலையரசனின் குடும்பத்தில் உள்ள அனைவருமே நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிஜி முத்தையாவின் ஒளிப்பதிவு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. கிராமத்தின் அழகை முடிந்தவரை தத்ரூபமாக காட்ட முயற்சித்துள்ளார்.

இருப்பினும் அதிகப்படியான ட்ரோன் காட்சிகள் உள்ளது, அவற்றை மட்டும் சற்று குறைத்திருக்கலாம். சாந்தனின் பின்னனி இசை படம் முழுக்கவே ஒரு பதட்டமான சூழலை உருவாக்குகிறது.

அது இது படத்திற்கு கூடுதல் பலமாகவும் அமைந்துள்ளது. அஜய் மனோஜின் படத்தொகுப்பும் இந்த படத்திற்கு கைகொடுத்துள்ளது.

RATINGS: 3/5

Pro : Nikil Murugan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *