படத்தின் கதை!
யஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் முரளி கிருஷ்ணன் தயாரித்து இருக்கும் படம் கருப்பு பல்சர். முரளி கிரிஷ் எஸ் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்தில் அட்ட கத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, மன்சூர் அலிகான், சரவண சுபையா, கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் கருப்பு பல்சர் படத்திற்கு INBAA இசையமைக்க, பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சசி தக்ஷா எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். அட்ட கத்தி தினேஷ் இந்த படத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
படத்தின் கதாநாயகன் அட்டகத்தி தினேஷ் சென்னையில் வாட்டர் பியூரிஃபையர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். திருமணத்திற்கு பெண் தேடி வரும் அவருக்கு கதாநாயகி ரேஷ்மா வெங்கடேஷ் மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகிறார். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. XL வண்டியை வைத்துள்ள தினேஷ், தன்னிடம் கருப்பு பல்சர் இருப்பதாக கதாநாயகி இடம் பொய் சொல்கிறார். இந்த பொய்யை உண்மையாக்க ஒரு பழைய கருப்பு பல்சர் வண்டியை வாங்குகிறார். ஆனால் அந்த வண்டி வாங்கியதிலிருந்து அவருக்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அந்த வண்டியை முதலில் யார் வைத்திருந்தார்? அதன் பின்னால் இருக்கும் கதையை பற்றி பேசும் படம் தான் இந்த கருப்பு பல்சர்.
அட்டகத்தி தினேஷ்க்கு லப்பர் பந்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் கருப்பு பல்சர். லப்பர் பந்து படம் அளவிற்கு இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். கதாநாயகி ரேஷ்மா வெங்கடேஷிற்கு பெரிய முக்கியத்துவம் கதையில் இல்லை. இருப்பினும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார். இவர்களை தாண்டி மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, கலையரசன் ஆகியோரும் அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். இவர்களை தாண்டி படத்தில் கொஞ்சம் சிரிக்க வைப்பது Prankster ராகுல் தான். குறிப்பாக இரண்டாம் பாதில் ராகுல் மற்றும் அவரது மனைவி பைக்கில் செல்லும்போது நடைபெறும் காட்சிகள் சிரிப்பை வர வைத்தது.
இன்பா இசையில் பாடல்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் பின்னணி இசை சில காட்சிகளில் நன்றாக இருந்தது. பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவும், சசி தக்ஷாவின் எடிட்டிங் ஓகேவாக இருந்தது. பல்வேறு விதங்களில் தமிழ் சினிமாவில் பேய் படங்கள் வந்திருந்தாலும் ஒரு பைக்கை வைத்து வித்தியாசமான பேய் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் முரளி கிரிஷ். இப்படி ஒரு கதையை யோசித்து இருந்தாலும், திரைகதையில் இன்னும் சுவாரசியத்தை இயக்குனர் ஏற்படுத்தியிருக்கலாம். பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகள் நன்றாக இருந்தது. ஆனால் சிஜி காட்சிகளை இன்னும் கொஞ்சம் தத்ரூபமாக கொண்டு வந்திருக்கலாம். மொத்தத்தில் இந்த கருப்பு பல்சர் வித்தியாசமான திரில்லர் படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
RATINGS : 3.5/5
CAST & CREW OF KARUPPU PULSAR
CAST :
Hero – ATTA KATHI DINESH
Heroine – RESHMA VENKATESH
Heroine – MADHUNIKA
Actor – MANSOOR ALIKHAN
Actor – SARAVANA SUBAIYA
Actor – KALAIARASAN KANNUSAMY
CREW :



