Jockey Movie Review

மதுரை மண்ணின் மணமும், வியர்வையும், பாரம்பரியமும் கலந்த ஒரு அரிய விளையாட்டை திரையின் மையத்துக்கு கொண்டு வந்திருக்கும் படம் ‘ஜாக்கி’.

ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போலவே காலம் காலமாக மதுரை சுற்றுவட்டாரங்களில் நடக்கும் கிடா முட்டு சண்டை – இதை முழுக்க முழுக்க கதையின் தளமாக வைத்து உருவான முதல் திரைப்படம் இது என்பதே இப்படத்தின் பெரிய பலம்.

மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டும் ராமராக யுவன் கிருஷ்ணா. அவன் உயிராக வளர்க்கும் கிடா ‘காளி’. அது தான் அவனின் உலகம். ஆண்டுதோறும் கிடா முட்டு போட்டியில் வென்று பதக்கம் வாங்கும் ஆதிக்க வீரன் கார்த்தியாக ரிதான் கிருஷ்ணாஸ்.

இந்த இருவரையும் நேருக்கு நேர் நிறுத்தும் ஒரு போட்டியே கதையின் திருப்புமுனை. எதிர்பாராத வகையில் ராமரின் கிடா காளி வெற்றி பெற, தோல்வியை ஏற்க முடியாத கார்த்தியின் கோபம் கொடூரமாக மாறுகிறது. அதன் விளைவாக உருவாகும் மோதல்களும், பழிவாங்கும் முயற்சிகளும், ஆக்சன் நிறைந்த கிளைமாக்ஸுடன் சொல்லி உள்ள படம் தான் ஜாக்கி.

RATINGS: 3/5

Pro Nikil Murugan

Leave a Response