இந்தியா, பாகிஸ்தான் யுத்தம் நடக்கும் போது அதன் பார்டரில் ஒரு இந்திய வீரர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதைக்களம் .
மேஜர் பல்வேந்தர்சிங், தொடையிலும், கழுத்திலும் ,குண்டடி பட்டு குற்றுயிரும், கொலையுயிரும்,என கிடக்கிறார்.
இந்திய வீரர்கள் சக்திவேல், அப்பா ராவ் இருவரும் அவரை காப்பாற்ற சுமந்து செல்கிறார்கள்.
ஆனால் போகும் வழியில் பாகிஸ்தான் காரர்களால் சுடப்பட்டு அப்பா ராவு உயிரிழக்கிறார் அதன் பிறகு சக்திவேல் பல்வேந்தர் சிங்கை காப்பாற்ற சுமந்து செல்கிறார் முடியவில்லை பல்வேந்தர்சிங் தற்கொலை செய்து கொள்கிறார் .
இந்திய வீரர் சக்திவேல், மனவேதனையோடு வரும்பொழுது கன்னிவெடி மீது கால் வைத்து விடுகிறார். அங்கு வரும் பாகிஸ்தானிய வீரர் பக்ருதீன், அவரைக் காப்பாற்றுகிறார். இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள் மனம் விட்டு பேசுகிறார்கள்
அப்பொழுது இந்தியாவின் தலைமை அதிகாரி சர்மாஜீ, சித்தாரா சுவேதா, டீமிடம் சக்திவேல் அகப்படுகிறார். அவருடன் பக்ருதீன் பிடிபடுகிறார். இப்பொழுது இந்திய வீரர் எப்படி பாக்கிஸ்தான் எதிரி நாட்டு வீரருடன் நட்பாக இருக்க முடியும் என்று சர்மா ஜி ,சக்திவேல் கையாலே பக்ருதீனை சுட வேண்டும், என்கிறார் சக்திவேல் நாட்டுக்காக பாகிஸ்தான் வீரரை சுட்டுக் கொன்றாரா? அல்லது தன்னை கண்ணி வெடியில் இருந்து காப்பாற்றிய அந்த கருணைக்காக மன்னித்து விட்டாரா? என்பதேகதை.
நடிகர் & நடிகைகள்
பாண்டிச்சேரியை சார்ந்த பிரதீப், கதையின் நாயகனாக சக்திவேல் என்று கதாபாத்திரத்தில் இந்திய ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.
ஒன் மேன் ஷோ வாக நன்றாக நடித்திருக்கிறார். குண்டடிப்பட்டு கிடக்கும் மேலதிகாரியை காப்பாற்றுவதா? அல்லது கருணை கொலை செய்வதா? என்று துடிக்கும் போதும் ,கன்னி வெடி மீது கால் வைத்து உயிருக்காக போராடும் போதும், நண்பன் பக்ருதீனை பாகிஸ்தானியர் என்று பார்ப்பதா? அல்லது தன்னுடைய காப்பாற்றிய கடவுள் என்று பார்ப்பதா? என்று கலங்கும் பொழுது நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்.
அவரின் மனைவியாக அர்ச்சனா சிங் நன்றாக நடித்திருக்கிறார் . யுவா யுவராஜ், மேஜர் பல்வேந்தர் சிங்காக சிறப்பாக நடித்திருக்கிறார் .
பாகிஸ்தானிய வீரராக பக்ருதீன் ஆக சுபா சிம்பு, மிகச் சிறப்பாக நடித்ருக்கிறார்
அமரன் எம்ஜிஆர், சர்மாஜியாக ஆர்மி ஆபீஸராக, நடித்திருக்கிறார் சில காட்சிகள் வந்தாலும் மிடுக்கான சிறப்பான நடிப்பை நடித்திருக்கிறார். சக்திவேல் நண்பனாக வரும் இன்பா, அப்பாராவுக்கான பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். ஜனனி, சித்தாரா என்ற ஆர்மி ஆபீஸராக மிடுக்காக நடித்திருக்கிறார். அனைவர் நடிப்பு சிறப்பாக இருந்தது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
மகிழ் மூவி மேக்கர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்திருக்கிறார் சிவ கனேஷ்,தன் நண்ருக்காக, நல்லதொரு முயற்சியை ,நல்ல கதைகளை தேர்வு செய்திருக்கிறார் .
கணேஷ் முத்தையாவின், ஒளிப்பதிவு காடுகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தி கதைக்களத்திற்கு ஒளிப்பதிவு உதவி செய்திருக்கிறது .
ஜெய் கிஷான் இசையில் துடிப்பும் விறுவிறுப்பும் கலந்து கட்டி தந்திருக்கிறார்.
ஆர் .கே .விஜய் படத்தொகுப்பு செய்திருக்கிறார் 2 மணி நேரம் கச்சிதமாக படம் இருக்கிறது . இன்பா , அரங்க அமைப்புக்கள் செய்து இருக்கிறார்.
பாடல்கள் எழுதி இயக்கி இருக்கிறார், கதை, வசனம் இவர் தான், ஜெய்சிவ சேகர்
(தற்போது அவர் இல்லை என்றாலும் அவர் படைப்பு பேசுகிறது)
ஒரு நல்ல படைப்பு நாட்டுக்கு தேவையான படைப்பு
இந்தியர் என்றாலும், பாகிஸ்தானியர் என்றாலும், மனிதம் ஒன்றுதான் உயிர் ஒன்றுதான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது குழந்தைகள் இருக்கிறது எனவே
தவறு செய்பவர்களை நிராகரித்து விட்டால் போதும் வாழ்நாள் முழுவதும் குற்றங்களை சுமந்து அவர்கள் வாழ்வார்கள் என்ற தத்துவத்தை அருமையாக சொல்லி இருக்கிறது இந்த படம் இப்போதைய காலகட்டத்திற்கு தேவையான படம்
இந்த படத்தின் மக்கள் தொடர்பு கணேஷ் அவர்கள் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.
Ratings : 4/5
PRO GANESH



