JENMA NATCHATHIRAM MOVIE REVIEW

Jenma Natchathiram Movie Review :
சமீபத்தில் வெளியான பெரும்பான்மையான பேய் படங்களில் லத்தின் மொழியில் அழைத்தால் மட்டுமே பேய்கள் வருகின்றன. இன்று வெளியாகியுள்ள ஜென்ம நட்சத்திரம் – The beginning படத்திலும் லத்தின் மொழியில் பேய்களை அழைக்கிறார்கள். ‘கடவுளுக்கு எதிரானவர்கள்’ (Anti christ) என்ற ஒன்லைனில் வெளியாகி உள்ளது ஜென்ம நட்சத்திரம்.
கடந்த ஆண்டு ஒரு நொடி என்ற திரில்லர் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணி வர்மன் ஜென்ம நட்சத்திரம் படத்தை இயக்கி உள்ளார். ஒரு நொடி படத்தில் ஹீரோவாக நடித்த தமன் அக்ஷன் இப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார்.
ஒரு பிரபல அரசியல்வாதியிடம் வேலை செய்யும் காளி வெங்கட் அரசியல்வாதியின் கருப்பு பணத்தை கடத்தி விடுவதால் அந்த அரசியல்வாதியின் ஆட்களால் கொல்லப்படுகிறார். இறக்கும் முன்பு கடத்திய பணத்தை தான் புதுசேரி செல்லும் வழியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் மறைத்து வைத்துள்ளதாக ஹீரோ மற்றும் நண்பர்களிடம் சொல்லி விட்டு இறந்து விடுகிறார். ஹீரோவும் நண்பர்களும் அந்த பழைய கட்டடத்திற்கு செல்கிறார்கள். இப்படி சொல்லும் போதே உங்களுக்கு புரிந்திருக்கும்… நீங்கள் யூகித்தது சரிதான் ஹீரோ அண்ட்டீம் செல்லும் அந்த கட்டிடத்தில் பேய், தீய சக்தி என பல வேண்டாத விஷயங்கள் இருக்கின்றன.
பேய் படத்தில் ஹீரோ – ஹீரோயின் தவிர உடன் இருபவர்கள் அனைவரையும் ‘பேய் கொன்று விடும்’ என்ற பல பேய் படங்களில் லாஜிக் போலவே இந்த படத்திலும் பேய் ஹீரோவின் நண்பர்கள் அனைவரையும் கொன்று விடுகிறது. பேய், அமானுஷ்யம் என்று செல்லும் கதையில் ‘ட்விஸ்ட்’ என்று நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் ‘பேய் காரணமல்ல, மனிதர்கள் தான் காரணம்’ என்று ஒரு இடம் வருகிறது. சரி இதை பிடித்து டைரக்டர் வலுவான திரைக்கதை தந்திருப்பார் என்று பார்த்தால், குழப்பத்தை மட்டுமே தந்திருக்கிறார்.
தமன் அவரது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு நொடி படத்தில் நம் பார்க்கும் தமனின் நடிப்பை விட இந்தசி திரில்லர் படத்தில் காணலாம். அமோகமான நடிப்பு வருங்காலத்தில் பெரிய கதாநாயகனாக கண்டிப்பாக வருவார் தமன் வாழ்த்துக்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு கதை ஓரளவு இருந்தாலும் எமோஷன் பீலிங்ஸ் ஆக்ட்டிங்-னு அமோகமான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார் நமது தமன் அழகான அருமையான நடிகர் அவர் எண்ணம் போலவே அவர் மென் மேலும் வளரனும் அனைவரும் இத்திரைப்படத்தை திரை அரங்குகளில் பார்க்க வேண்டும்.
PRO D’one
Ratings : 3/5