F1 – Movie Review
எனக்கு வாழ்வில் எல்லாமே கிடைத்திருக்கிறது. மிகவும் சந்தோஷமாய் உணர்கிறேன். நான் ஒரு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று நீங்கள் உணரும் போது ..
வாழ்வு அப்படியே தலைகீழாக மாறினால் என்னவாவீர்கள்?
வாழ்வின் கொடூர முகத்தை எதிர்கொள்ளும் தைரியம் உங்களுக்குள் இருக்குமா?
உங்களின் பிரியமானவர்கள் உங்களை விட்டு நிரந்தரமாய் பிரிந்து சென்றுவிட்டால்?!
இத்தகைய நிகழ்வுகளால் நீங்கள் நிலை தடுமாறி.. மது, மாது , சூதாட்டம் என்று தடம் புரண்ட போதும் கூட ..
உங்களின் லட்சியத்தை நோக்கி பயணப்படுவது சாத்தியமா ?
ஆனால், உங்களின் இதயத் துடிப்பாக அந்த #லட்சியம் மாறிவிட்டால் ..
அந்த இலக்கு உங்களை என்றுமே கை விடாது . ‘தேடி வந்து , என்னை எடுத்துக் கொள்’ என்று உங்களின் முன் மண்டி போட்டு இறைஞ்சும் என்பதே F1 படத்தின் கதை.
மேற்சொன்னவற்றை சில வசனங்களின் மூலம் இயக்குனர் கடத்த விரும்பியவற்றை, பத்திரிக்கையாளர் நேர்காணலில் தனது Yeah .. Yeah .. Yeah .. என்ற ஒற்றை சொல் மூலமும் , விரக்தியான புன்னகையின் மூலமும் நமக்கு கடத்தியிருக்கிறார் கதையின் நாயகன் Bradpitt.
Sonny Hayes என்கிற அவரது கதாபாத்திரத்தின் பெயரை இனி எவருமே மறக்க மாட்டோம். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் பிராட் பிட்.
ஹெல்மெட்டிற்குள் இருக்கும் அவரின் கண் விழிகள் கூட
நமக்கு உணர்வை கடத்தி அவ்வப்போது கலங்கடிக்கின்றன.
அவரது அந்த வெள்ளந்தி சிரிப்பும், சீட்டுக்கட்டின் சீட்டுகளையும், மஞ்சள் பந்துகளை குறி வைத்து எறிந்து பழகுவதிலும் , தனக்கு எதிரான எண் ஆகவே சீட்டு வந்த போதும் புன்னகை பூப்பதும் என எவர் மனதையும் கொள்ளை கொள்கிறார் மனிதர்.
Formula 1 என்றால் என்னவென்றே அறியாத ரசிகர்களை , கை பிடித்து அழைத்து ரேஸ் காரில் அமரவைத்து
300 கி.மீ வேகத்தில் நம்மை பறக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர் திரு.Joseph Kosinski
9 போட்டிகள் முடிவதற்குள், நம் மனதை காரோடும், போட்டிகளோடும் கரைய வைக்கும் மாயத்தையும் புரிந்திருக்கிறார் என்றே சொல்லலாம் . ஒரு தலைமுறை வயது வித்தியாசமுள்ள இரு நபர்கள், ஒரு இலக்கை நோக்கி குழுவாக பயணிக்கும் போது எதிர் கொள்ளும் நடைமுறை உளவியல் சிக்கல்களை அற்புதமாகக் கையாண்டு, தீர்வும் தந்தமைக்கு இயக்குனரை மனமார பாராட்டலாம் .
பொதுவாக ஆங்கிலப்படங்கள் என்றாலே, 1.15 மணி அல்லது 1.5 மணி நேரம் என்றிருக்கும்போது , இரண்டரை மணி நேரமும் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்கள் ஒவ்வொருவருமே .
Co Driver ஜோஷ்வா பியர்ஸ் , உயிர் நண்பன் Ruben, Team Coach, Designer , Members என்று எவரையும் சோடை சொல்லவே முடியாது .
உயிரைப் பணயம் வைத்து தனது வாழ்நாள் லட்சியத்தை அடையும் அந்த நொடியிலும் கூட.. வெற்றிக் கோப்பையை, தன்னை அழைத்து வந்த நண்பனிடம் தரச் சொல்லும் போது
நம் ஒவ்வொருவரின் கண்ணிலும் கண்ணீர் பெருக்கெடுப்பதை எவராலும் தடுக்கவே முடியாது . அவ்வளவு உணர்ச்சிப்பெருக்கான காட்சியமைப்புகள் மற்றும் நடிப்பு .
அருமை
என்னடா வாழ்வு என்று மனம் சோர்வாக இருக்கிறதா ?
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது
என்று மனம் வருத்தமாய் இருக்கிறதா?
இந்த திரைப்படத்தை ஒருமுறை பாருங்கள் .
எழுச்சி அடைவீர்கள் நண்பர்களே..!



