Maargan Movie Review :
கதைக்களம் :
சென்னையில் மர்மமான முறையில் விஷ ஊசி போட்டு உடல் முழுவதும் கருகிய நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரிகிடா விசாரிக்கிறார். மும்பையில் போலீசாக இருக்கும் விஜய் ஆண்டனி இந்த செய்தியை பற்றி தெரிந்து கொண்டு அந்த வழக்கை விசாரிக்க அனுமதி கேட்கிறார். ஏற்கனவே விஷ ஊசியால் பாதிக்கப்பட்டு காவல்துறையில் இருந்து ஓய்வில் இருப்பதால் இந்த வழக்கை அந்த அபிஷியலாக விசாரிக்க அப்போது ஒரு ஆச்சரியமான விஷயம் தெரிய வருகிறது. மேலும் அவர் கூறிய தகவலை வைத்துக்கொண்டு யார் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை தெரிந்து கொள்கிறார், அது என்ன என்பதை அடுக்கடுக்கான திருப்பங்களுடன் சொல்லி இருக்கும் படம் தான் மார்கன்.
பல படங்களில் எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ஒரு படத்தை க்ரிப்பிங் ஆகா இருக்க செய்வது எடிட்டரின் கையில் தான் உள்ளது. அப்படி பல படங்களை தனது கத்திரிக்கோல் மூலமாக ட்ரிம்மிங் செய்து ரசிக்கும் படியாக மாற்றிய அனுபவத்தை வைத்துக்கொண்டு பரபரப்பான திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். இது ரியாலிட்டி படமா, இல்லை பாண்டஸி படமா என்று கேட்க வைக்கும் அளவுக்கு திரைக்கதையை சுவாரசியமாக எழுதி அதற்க்கு ஏற்றார் போல் கதாபாத்திரங்களை கச்சிதமாக தேர்வு செய்து பொருத்தி இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் அடித்து படத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.
விஜய் ஆண்டனிக்கு இது போன்ற த்ரில்லர் படம் வித்தியாசமான கதைக்களம் என்றால் ஆல்வா சாப்பிடுவது போல். இதிலும் அப்பாவி முகத்துடன், தனது எதார்த்தமான நடிப்பி மூலம் கவர்கிறார். காவல்துறை அதிகாரியாக படம் முழுவதும் கேஸை கண்டுபிடிக்க அவர் போராடும் சீன்களில் நன்றாகவே நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனிக்கு நிகராக இந்த படத்தில் அறிமுகமாகி இருக்கும் அஜய் தீஷன் கதாபாத்திரம் அமைந்துள்ளது. இன்னும் சொல்ல போனால் சில காட்சிகளில் விஜய் ஆண்டனியை தாண்டியும் உள்ளது.
இவர்களை தவிர போலீசாக வரும் மகாநதி சங்கர், பிரிகிடா ஆகியோர் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வழக்கம் போல் சமுத்திரக்கனி நடிப்பு கச்சிதமாக உள்ளது. வித்தியாசமாக நடிப்பை தீப்சிகா கொடுத்து படத்தை எலிவேட் செய்துள்ளார். இவர்களோடு நடித்துள்ள வினோத் சாகர், இராமச்சந்திரன், கனிமொழி உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் யுவாவின் கேமரா படக்காட்சிககளை பிரம்மாண்டமாக காட்டியுள்ளது. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிக்கும் படியாக உள்ளது.
பிளஸ் & மைனஸ்
திரைக்கதை, கிளைமாக்ஸ் ட்விஸ்ட் மற்றும் நடிகர்களின் பங்களிப்பு படத்திற்கு பிளஸ் ஆகா அமைந்துள்ளது. அதோடு படத்தை சஸ்பென்ஸ்த்ரில்லராக தொடங்கி அதன் பிறகு பாண்டஸி படம் என்று சொல்லும் அளவுக்கு சுவாரசியமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை வைத்து கிளைமாக்ஸ் முடிந்திருப்பது பெரிய ட்விஸ்ட். ஒரு சில இடங்களில் இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருந்தால் திரில்லர் படங்களில் பெஞ்ச் மார்க்காக மார்கன் இருந்திருக்கும்.
Ratings : 4/5
Release Date : June 27, 2025
Starring : Vijay Antony, Ajay Dhishan, Samuthirakani, Brigida, Deepshikha, Mahanathi Shankar, Vinodh Sagar
Director : Leo John Paul
Producer : Fatima Vijay Antony
Music Director : Vijay Antony
Cinematographer : Yuva S
Editor : Leo John Paul
PRO REKHA



