Actor Ravi Mohan launched production house in his Name

Actor Ravi Mohan launched production house in his name

சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் ரவி மோகன்

கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற அரசியல் படத்தில் நடித்து வருகிறார் ரவி மோகன்..

மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் நடித்து வருகிறார்..

இப்போது ரவி மோகன் நடித்துள்ள ‘ஜீனி’ படம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்நிலையில் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளராகக் களமிறங்கவுள்ளார்.

தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘ரவி மோகன்’ என்ற பெயரை வைத்துள்ளார்.

தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல்படமாக ‘டிக்கிலோனா’ மற்றும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

 

 

Leave a Response