நம்ம ரக்ஷிதாவா இப்படி.? சதீஷ்குமார் இயக்கத்தில் சூட்டை கிளப்பும் ‘ஃபயர்’ பாட்டு.!
டிவி சீரியல் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம் போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். வெப்சீரிஸ்களிலும் நடிக்கிறார்… பல வருடங்களுக்கு முன்பு வெளியான ராதா மோகனின் ‘உப்புக் கருவாடு’ என்ற படத்தில் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.. அதன் பிறகு படங்களின் நடிக்காமல் டிவி சீரியல்களில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார் முதன்முறையாக இயக்கி உள்ள படம் ‛ஃபயர்’. படத்தில் நடித்து கவர்ச்சியில் கலக்கி இருக்கிறார் ரக்ஷிதா.
இதில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்க ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இதில் இருந்து ‛மெது மெதுவாய்’ என்ற பாடலில் முழு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா இருவரும் அவ்வளவு நெருக்கமாக கவர்ச்சியாக ஆடி பாடி நடித்துள்ளனர்.
இதை பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவா இப்படி ?? ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஃபயர் படம் பிப்ரவரி 14ல் ரிலீஸாகிறது..



