HomeCinema Newsகார்த்திகை தீபத் திருநாளில் வெளியான ‘அறுவடை’ GLIMPSE – படக்குழுவிற்கு நடிகர் நட்டி நட்ராஜ் பாராட்டு!

கார்த்திகை தீபத் திருநாளில் வெளியான ‘அறுவடை’ GLIMPSE – படக்குழுவிற்கு நடிகர் நட்டி நட்ராஜ் பாராட்டு!

-

கார்த்திகை தீபத் திருநாளில் வெளியான ‘அறுவடை’ GLIMPSE – படக்குழுவிற்கு நடிகர் நட்டி நட்ராஜ் பாராட்டு!

நடிகர் நட்டி நட்ராஜ் வெளியிட்ட ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ்!

கார்த்திகை தீபத் திருநாளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ்!

‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்து, நடித்தவர் மு. கார்த்திகேசன். தொடர்ந்து தனது எம். கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ‘அறுவடை’ திரைப்படத்தைத் தயாரித்து, கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.

தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமான மு. கார்த்திகேசன், இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்க, ராஜசிம்மன், கஜராஜ், அனுராமி, தீபா பாஸ்கர், கவிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு பிரேம்குமார் முருகேசன், இசை – ரகு ஸ்ரவன் குமார், படத்தொகுப்பு கே.கே. விக்னேஷ்,பாடல்கள் கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி,நடனம் – ஏ.எம்.ஜே,கலை இயக்கம் – ஜோதின் விஷாக் – அனுப்ஷா, சண்டைக்காட்சிகள் டி.ஆர்,இணை இயக்குநர் ஜெயன்.

படத்தின் கதை குறித்து இயக்குநர் மு. கார்த்திகேசன் கூறியதாவது:

“ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து, அது ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படிச் சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டே இப்படத்திற்கு அறுவடை எனப் பெயரிட்டுள்ளோம்.

இப்படத்தின் க்ளிம்ப்ஸை நடிகர் நட்பி வெளியிட்டு படக்குழுவினருக்கு உற்சாகம் அளித்தார். காட்சிகளைப் பார்த்த அவர், மிகவும் சிறப்பாக இருப்பதாக மனதாரப் பாராட்டியதுடன், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தனது வாழ்த்துகளையும் படக்குழுவினருக்குத் தெரிவித்தார்.

கார்த்திகை தீபத் திருநாளின் சிறப்பான நாளில் வெளியான ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

PRO : SAKTHI SARAVANAN

LATEST POSTS

தாயன்’ படத்தில் பாடல் எழுதி இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா*

தாயன்’ படத்தில் பாடல் எழுதி இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா* *ஹாலிவுட் பாணியில் உருவாகும் சூப்பர் நேச்சுரல் மிஸ்ட்ரி த்ரில்லர் ‘தாயன்’* ஸ்காஸ்கா ஃபிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் டாடியானா பேபன்கோ (Tatiana Babenko) மற்றும் பிரக்க்ஷை பாபு ஆகியோர்...

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது! புத்தாண்டு வெளியீடாகத் பிரேம் குமார் - ஃபஹத்...

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்!

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்! அருண் விஸ்வா தயாரிப்பில், தருண் தேஜா எழுதி இயக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது! தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து...

MOUNA MOZHIGAL MOVIE REVIEW

மௌன மொழிகள் திரைப்படம் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் உண்மையான அன்பை மையமாகக் கொண்ட ஒரு ரொமான்டிக் டிராமா. அழகான பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இளைஞன், Miss Chennai...

Most Popular

spot_img