HomeCinema Newsஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம்...

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

-

வீட்ல Couple👩‍❤️‍💋‍👨…ஆபிஸ்ல Strangers🤨!

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

நடிகர்கள் பிரதீப் ஆண்டனி, ஸ்மேஹா மணிமேகலை, சனம் ஷெட்டி மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் புதிய தமிழ் தொடர், ஒவ்வொரு புதன்கிழமையும் நான்கு எபிசோடுகளுடன் வெளியாகிறது.

திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் கணவன், மனைவி, வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் தெரியாத அந்நியர்களைப் போல நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்னவாகும்? இந்தச் சுவாரஸ்யமான கேள்விக்கு நகைச்சுவை கலந்த பதிலுடன் ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய தமிழ் ஒரிஜினல் தொடரான ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடரை அறிமுகப்படுத்துகிறது.

இந்தத் தொடர் நவம்பர் 18 ஆம் தேதி முதல் வெளியாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் நான்கு புதிய எபிசோடுகள் வெளியாகும்.

கார்ப்பரேட் அலுவலகப் பின்னணியில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடர், குடும்பச் செலவுகளைச் சமாளிக்கப் போராடும் இளம் தம்பதியான அறிவு மற்றும் ஐஸ்வர்யாவைச் சுற்றி நகர்கிறது. இருவருக்கும் ஒரே ஐடி நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் கடுமையான விதிமுறையின்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகப் பணிபுரியக் கூடாது. இதனால் தங்களது வேலையையும் பொருளாதார நிலையையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், தங்களது திருமண உறவை மறைத்து, அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் போல நடந்துகொள்ள இருவரும் முடிவு செய்கின்றனர்.

இதற்குப் பிறகு ஆபிஸ் மீட்டிங்ஸ், காபி பிரேக்ஸ், சக ஊழியர்களுடனான உரையாடல்கள் என ஒவ்வொரு தருணத்திலும் அவர்களது ரகசியம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பதற்றம் உருவாகிறது. கண்டிப்பான மேலாளரைச் சமாளிப்பது முதல் ஆர்வத்துடன் கேள்வி கேட்கும் சக ஊழியர்களை எதிர்கொள்வது வரை, தங்களது திருமண வாழ்க்கையை மறைப்பதற்காகத் தொடர்ந்து புதுப்புது பொய்களைக் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நகைச்சுவைக்கு மத்தியில், இன்றைய சூழலில் பணிபுரியும் இளம் தம்பதிகளின் வாழ்க்கைப் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் கார்ப்பரேட் வாழ்க்கையின் அன்றாட யதார்த்தங்களையும் இந்தத் தொடர் பேசுகிறது.

இந்தத் தொடரில் பிரதீப் ஆண்டனி மற்றும் ஸ்மேஹா மணிமேகலை ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களான அறிவு மற்றும் ஐஸ்வர்யாவாக நடித்துள்ளனர். இவர்களுடன் திரைப்படங்களில் நடித்ததன் மூலமும், பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமான சனம் ஷெட்டி மற்றும் ‘தடம்’, ‘கலகத் தலைவன்’, ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் தொடர் குறித்து நடிகர் பிரதீப் ஆண்டனி பகிர்ந்து கொண்டதாவது, “திருமணமானதை அலுவலகத்தில் மறைப்பது சாதாரண விஷயம் இல்லை. அப்படி மறைக்கும்போது என்னவாகும் என்பதை நகைச்சுவை கலந்து காட்ட இருக்கிறது ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடர். ஒரு நல்ல கணவராக இருப்பதற்கும், அலுவலகத்தில் அந்நியரைப் போல நடிப்பதற்கும் இடையில் அறிவு தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பார். ஒவ்வொரு சூழலையும் கட்டுப்படுத்த அவர் முயற்சிக்கும்போதெல்லாம் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

அலுவலக வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் தங்களை இதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். இந்தத் தம்பதி தங்களது ரகசியத்தை எப்படிக் காப்பாற்றப் போராடுகிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் மிகவும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகை ஸ்மேஹா மணிமேகலை பகிர்ந்து கொண்டதாவது, “திருமணமானவர்கள் பெரும்பாலும் வீட்டிலும் வெளியிலும் வெவ்வேறு விதமாக நடந்துகொள்வார்கள். ஆனால், அலுவலகத்தில் தங்களது கணவரையே தெரியாது என்று நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? ஐஸ்வர்யா தனது உறவு, வேலை மற்றும் எப்போது ரகசியம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம் என அனைத்தையும் சமாளிக்க வேண்டும். இதில் வரும் சூழல்கள் சிரிப்பை ஏற்படுத்தினாலும், இணைந்து ஒரு வாழ்க்கையை உருவாக்கப் போராடும் இருவரின் உண்மையான கதையும் இதில் இருக்கிறது” என்றார்.

நடிகை சனம் ஷெட்டி, “திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ஐடி துறையில் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருப்பதால், இந்தத் தொடரின் கார்ப்பரேட் பின்னணியையும் அலுவலக வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளையும் உடனடியாக என்னால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. ஆபிஸ் மீட்டிங்ஸ், அரசியல், சக ஊழியர்கள் மற்றும் எதிர்பாராத சூழல்கள் என அனைத்துமே எனக்கு மிகவும் பரிச்சயமானவை. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இந்த அனுபவங்களை நகைச்சுவையான சூழல்களாக மாற்றியிருப்பதுதான் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடரின் சிறப்பு. பார்வையாளர்கள் ரசிப்பதுடன் தங்களையும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய புதுமையான நகைச்சுவைத் தொடர் இது” என்றார்.

சந்திரபோஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மகிழ் திருமேனி பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு சூழலில் இருந்து இயல்பாக உருவாகும் நகைச்சுவை மிகவும் இயல்பாக இருக்கும். தங்களது திருமண வாழ்க்கையைப் பிறரிடமிருந்து மறைக்கப் போராடும் இரண்டு மனிதர்கள் என்ற எளிமையான, அதேசமயம் சுவாரஸ்யமான கதைக்களத்தைக் கொண்டது ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடர். பணியிடச் சூழல், ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான மோதல்கள், தொடர்ந்து ஏற்படும் தவறான புரிதல்கள் என நகைச்சுவைக்கு ஏராளமான வாய்ப்புகள் இதில் உள்ளன. இந்தத் தொடரில் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது” என்றார்.

அப்துல் கபீஸ் இயக்கத்தில், ஜெகன் பாஸ்கரன் தயாரித்துள்ள ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ தொடர், ஜியோஹாட்ஸ்டாரின் லாங் ரன்னிங் ஷோஸ் வரிசையில் இணைகிறது. மொத்தம் 100 எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தொடரில், ஒவ்வொரு வாரமும் நான்கு எபிசோடுகள் வெளியாகும். அலுவலக நகைச்சுவை, காதல் மற்றும் கதாபாத்திரங்களின் மாறிவரும் உறவுகள் எனப் பல அம்சங்களுடன் வாரந்தோறும் பார்வையாளர்களுக்கு புதுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கவுள்ளது.

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

LATEST POSTS

Future Runup Films Acquires South Indian Distribution Rights for Regin S. Babu’s Mystery Thriller ‘Bouma’ and Amal Neerad’s Action-Crime Drama ‘Deux’ Following the Success...

பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து, ரெஜின் எஸ். பாபுவின் மிஸ்டரி-த்ரில்லர் 'பௌமா' மற்றும் அமல் நீரதின் ஆக்ஷன்-க்ரைம் டிராமா 'டூக்ஸ்' ஆகிய படங்களை தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் 'பெத்லகேம்...

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள்

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!* *நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!* தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப்...

பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங்’

பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் 'பேங் பேங் – Bang Bang' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues)...

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்

*நடிகர் நாகார்ஜுனாவின் 'கிங் 100 - King 100' திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் 'கர்ணா - Karna' கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!* 'கிங் 100 - King 100' திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா ...

Most Popular

spot_img