HomeCinema Newsநடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின்...

நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு*

-

*நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு*

நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

 

இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் – (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மித்துன் மாணிக்கம் தயாரித்திருக்கிறார். அவருடன் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP – Milliennials Movie Production L L P நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முஹம்மத் கனி ஃபைசல்- டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

 

எதிர்வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.  சிலப்பதிகாரத்தில தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும் போது… அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்… என தொடங்கும் இந்த டீசர்,  2020 ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது. காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒரு நாள் பயணத்தில் நிகழும் சுவாரசியமான சம்பவங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும்…. இந்த டீசர் வெளிப்படுத்துகிறது. அத்துடன் இதன் பின்னணி இசை ,காட்சி அமைப்பு  என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

LATEST POSTS

தனுஷ் படத்தை ஐரோப்பியாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films

தனுஷ் படத்தை ஐரோப்பியாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films *ஓம் திரைப்படத்தை ஐரோப்பியாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films) *ஐரோப்பிய...

F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!

F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது! ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் இயக்கத்தில் தமிழ் – மலையாளம் என இரு மொழிகளில்...

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன! டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, நடிகர்...

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’! *திரைப்பட பாணியில் உருவான அழகான காதல் பயணம் – இயக்குநர் சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் கூட்டணியில்...

Most Popular

spot_img