HomeCinema Newsவிரைவில் திரைக்கு வரும் ஒட்டாரம் திரைப்படம்*

விரைவில் திரைக்கு வரும் ஒட்டாரம் திரைப்படம்*

-

*விரைவில் திரைக்கு வரும் ஒட்டாரம் திரைப்படம்*

எஸ்.எஸ். ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சார்பில் P. சாமுவேல் அவர்கள் தயாரிப்பில், இயக்குநர் ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஒட்டாரம்’. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

படத்தில் கதையின் நாயகனாக காட்வின் ஃப்ராங்க் நடித்துள்ளார். ‘யாத்திசை’ பட நாயகி ராஜலட்சுமி, ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்த டி.எஸ்.கே மற்றும் கன்னடத் திரைப்படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரோபோ கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா மற்றும் மூனார் ரமேஷ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

C. சத்யா இசையமைக்க, M.S. பரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். R. சத்யநாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தின் பாடல்களை விவேக் மற்றும் மோகன்ராஜன் எழுதியுள்ளனர். இரண்டு பாடல்களுக்கு ஷெரிஃப் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மான்குத்திமேடு வனப்பகுதியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, 30 நாட்களுக்கு மேல் கடும் பனிப்பொழிவுக்கு நடுவே படமாக்கப்பட்டுள்ளன. யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதியாக இருப்பதால், அங்கு நடைபெற்ற படப்பிடிப்பு நாட்கள் மிகுந்த சவால்களுடனும், ஒருவித அச்சத்துடனும் நடைபெற்றதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவிலேயே தூய்மையான காற்று நிலவும் பகுதிகளில் ஒன்றாகக் கூறப்படும் மான்குத்திமேட்டில் நடைபெற்ற படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னை தண்டையார்பேட்டை பகுதியிலும் சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படத்தின் கதை குறித்து இயக்குநர் ரா. ராமமூர்த்தி கூறுகையில்,

“இது வித்தியாசமான படம் என்பதைத் தாண்டி, கண்டிப்பாக ஒரு விசித்திரமான அனுபவத்தைத் தரும் படமாக இருக்கும். ‘யார் இவர்கள்? இங்கு என்ன நடக்கிறது? நாம் ஏன் நம்மைப் பற்றி இவ்வளவு ஆராய்ச்சி செய்கிறோம்?’ என்ற கேள்விகள் படம் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் தோன்றும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தலின் வலியையும், அது குறித்த விழிப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்ட கதை இது. ஒரு தனிமனிதன் தனது வாழ்வியல் சுதந்திரத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறான் என்பதையும், ‘Self-Doctoring’ மற்றும் ‘Self-Realisation’ பற்றிய கருத்துகளையும் இப்படம் காட்சிப்படுத்துகிறது,” என்றார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வெகு விரைவில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

GONDHAL MOVIE REVIEW – A Dark & Intriguing Thriller That Turns A Wedding Celebration Into A Night Of Chaos!

A ‘slow-mo’ thriller designed to show that joyous celebrations can be the backdrop for emotional upheavals and criminal intent! The actors are extremely competent and elevate...

MOUNA MOZHIGAL MOVIE PRESS MEET

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘மௌன மொழிகள்’ – திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் (Sri Vaari Entertainment) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் பி. ஸ்ரீமன் தயாரிப்பில், இயக்குநர்...

BLACK GOLD MOVIE REVIEW – An emotionally powerful film that beautifully captures the depth of relationships, the pain of longing, and the journey of...

கார் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் தலைமை பழுது பார்ப்பவராக பணியாற்றும் நாயகன் வெற்றி தந்தை, தாய், தங்கையுடன் அமைதியாக வாழ்ந்து வருவதோடு, தனது கல்லூரி தோழி நாயகி பிரியலயாவை காதலித்தும் வருகிறார். இதற்கிடையே, லாரி ஓட்டுநரான வெற்றியின்...

Flag Movie Review

ஃப்ளாக் திரைப்படம் தேசப்பற்று, ஒற்றுமை, துணிச்சல் மற்றும் இந்திய தேசியக் கொடியின் பெருமையை உணர்த்தும் ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பு. ஒரு சிறுவனின் வாழ்க்கைப் பயணத்தின் வழியாக தேசத்தின் மீதான அன்பையும், தேசியக் கொடியின் பின்னால் இருக்கும்...

Most Popular

spot_img