HomeCinema Newsதென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் "பனங்காட்டான்"

தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் “பனங்காட்டான்”

-

தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் “பனங்காட்டான்”

பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வீரமுருகனின் ” பனங்காட்டான் ”

ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பனங்காட்டான்”

மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு,கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வீரமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார்

இந்த படத்தில் அப்புக்குட்டி, காதல் சுகுமார், அரிசி கணேசன், சேரன் ராஜ், கனிமொழி, பீட்டர் சரவணன், மெய் ராஜன், விமல் ராஜன், மாஸ்டர் ரோஹித்,செம்பட்டி கருப்பையா, திருச்சி சுரேஷ் குமார் ஆகியோர் முக்கி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சுந்தர். N இசையமைத்துள்ளார்.

ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை பன்னீர்செல்வம் மேற்கொண்டுள்ளார்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வீரமுருகன்.

படம் பற்றி இயக்குனர் வீரமுருகன் பகிர்ந்தவை…

தென் மாவட்டத்தில் நடக்கும் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளேன்.

ஒரு முக்கிய பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த ஊர் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாடு வைத்து, அதை மீறி யாரும் உள்ளே வரக்கூடாது, வெளியே போக கூடாது என்று இன்று வரை மறைமுகமாக அதனை கடைபிடித்து வருகின்றனர்.
அது என்ன மாதிரியான கட்டுப்பாடு, அது சமூகத்தில் என்னென்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது,என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் தான் இந்த ” பனங்காட்டான் ”

பாலமேடு ,தூத்துக்குடி, ராமநாடு, மூணாறு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம், விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம் என்றார் இயக்குனர் வீரமுருகன்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

Actor Shiva Inaugurates the Third Branch of Nassaa Uth Hub at CDR Mall in Madurai

Actor Shiva Inaugurates the Third Branch of Nassaa Uth Hub at CDR Mall in Madurai Expanding its footprint beyond Chennai, Nassaa Uth Hub brings an exciting...

People’s Film Academy and Channel Five have joined hands to bring this iconic film “SHANKARABHARANAM” back to theatres

திரையரங்குகளில் மீண்டும் 'சங்கராபரணம்' பீப்பிள்'ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் இணைந்து காலத்தால் அழியாத இசைக் காவியமான 'சங்கராபரணம்' திரைப்படத்தை அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியிடுகின்றனர். இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த இசைக் காவியங்களில் ஒன்றான ‘சங்கராபரணம்’ திரைப்படம்,...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்! தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான முன்னாள் தலைவர்கள் திரு. எஸ்.ஏ. சந்திரசேகரன், திரு....

TITANIC – KADHALUM KAVUNDHU POGUM MOVIE REVIEW

A refreshing romantic entertainer that takes us through the beautiful journey of love, friendship and unexpected emotions. With an interesting ensemble cast, relatable moments and...

Most Popular

spot_img