HomeCinema Newsஐந்து மொழிகளில் உருவாகி வரும் " ஃபீல் மை லவ் " படத்தின் புதிய போஸ்டர்...

ஐந்து மொழிகளில் உருவாகி வரும் ” ஃபீல் மை லவ் ” படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது!

-

ஐந்து மொழிகளில் உருவாகி வரும் ” ஃபீல் மை லவ் ” படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது!

காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் ‘ஃபீல் மை லவ் ” இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

இறுதி கட்டப் பணிகளை நெருங்கியுள்ளது ” ஃபீல் மை லவ் ”
ஹரி பிரகாஷ்.எம் இயக்கியுள்ளார்!

பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல ‘பான்-இந்தியா’ (Pan-India) திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A. N.பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் ” Feel My Love ” ஃபீல் மை லவ் ”

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் M.S. பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார்.

ஹவுஸ் மேட்ஸ்’ (House Mates) படத்தின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்த எம்.எஸ். சதீஷ் இப்படத்தின் ஒளிப்பதிவை செய்துவருகிறார்.

திறமையான இசையமைப்பாளர்களான ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.

லவ்’ (LOVE), ‘கொலை சேவல்’ (Kolai Seval) போன்ற படங்கள் மற்றும் பல குறிப்பிடத்தக்க விளம்பரப் படங்களில் பணியாற்றிய அஜய் மனோஜ் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

ஹரி பிரகாஷ் எம் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

“வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்” என்ற மனதிற்கு இதமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான உறவுகள், ஆழமான உணர்ச்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.

இறுதிக்கட்டப் பணிகள் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிவரும் இந்த
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

Actor Shiva Inaugurates the Third Branch of Nassaa Uth Hub at CDR Mall in Madurai

Actor Shiva Inaugurates the Third Branch of Nassaa Uth Hub at CDR Mall in Madurai Expanding its footprint beyond Chennai, Nassaa Uth Hub brings an exciting...

People’s Film Academy and Channel Five have joined hands to bring this iconic film “SHANKARABHARANAM” back to theatres

திரையரங்குகளில் மீண்டும் 'சங்கராபரணம்' பீப்பிள்'ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் இணைந்து காலத்தால் அழியாத இசைக் காவியமான 'சங்கராபரணம்' திரைப்படத்தை அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியிடுகின்றனர். இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த இசைக் காவியங்களில் ஒன்றான ‘சங்கராபரணம்’ திரைப்படம்,...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்! தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான முன்னாள் தலைவர்கள் திரு. எஸ்.ஏ. சந்திரசேகரன், திரு....

TITANIC – KADHALUM KAVUNDHU POGUM MOVIE REVIEW

A refreshing romantic entertainer that takes us through the beautiful journey of love, friendship and unexpected emotions. With an interesting ensemble cast, relatable moments and...

Most Popular

spot_img