HomeCinema News'Cold Call', a feel-good tale about the lives of sales representatives, to...

‘Cold Call’, a feel-good tale about the lives of sales representatives, to release on September 18..

-

விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வியலை ஃபீல் குட் கலாட்டாவாக சொல்லும்’ கோல்ட் கால்’

செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் புதுமுகங்களின் ‘கோல்ட் கால்’

தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் படைப்புகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. வித்தியாசமான கதைக்களங்களில் கதையை சொல்லி பார்வையாளர்களை அசத்தும் புதுமுக கலைஞர்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் சிவப்பு கம்பளத்தை விரித்து வரவேற்றிருக்கிறது. அந்த வகையில் சித்து மூலி மணி -ஸ்ரீ வைஷ்ணவ்- சந்தோஷ் எஸ் ஏ – கிருஷ்ணா விஜய் சந்திரன்- ஆகிய நான்கு புதுமுக நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கோல்ட் கால்’ திரைப்படம்.. எதிர்வரும் 18 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோல்ட் கால்’ திரைப்படத்தில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ் ,சந்தோஷ், கிருஷ்ணா விஜய் சந்திரன், வி. ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே ,கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. என். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சுரேஷ் ஆறுமுகம் மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இதனை வாக் த்ரோ என்டர்டெயின்மென்ட் – Walkthrough Entertainment நிறுவனம் சார்பில் கேசவ மூர்த்தி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்த சமூகத்தில் விற்பனை பிரதிநிதிகள் என்பவர்களும் உண்டு. இவர்களின் வாழ்வியலில் நடைபெறும் சம்பவங்களை காமெடியாகவும், ஃபீல் குட் என்டர்டெய்ன்மென்ட்டாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது ஜென் ஸீ தலைமுறையினரும் தங்களை இணைத்துக் கொண்டு ஜாலியாக ரசிப்பார்கள். விற்பனை பிரதிநிதிகளான நால்வர் நண்பர்கள். அவர்களுக்குள் ஏற்படும் காதல்- மோதல்- காமெடி- ஆகியவற்றை இரண்டு மணி நேரத்திற்குள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லி இருக்கிறோம்” என்றார்.

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் செப்டம்பர் 18ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

‘Cold Call’, a feel-good tale about the lives of sales representatives, to release on September 18..

Newcomers in Tamil cinema have always found a special welcome, and films that tell fresh stories through new talent continue to be embraced by audiences.

In the same tradition, ‘Cold Call’ features four newcomers, Siddu Moolimani, Sri Vaishnav, Santhosh S.A. and Krishna Vijay Chandran, as its lead actors. The film’s unit has announced with enthusiasm that it will release in theatres worldwide from the 18th of this month.

Directed by Thambidurai,
‘Cold Call’ also stars V. Srikanth, Balaji Rajasekar, Amitha Ranganatha, Nisha Hegde and Keerthana, among others. Cinematography is by G.N. Saravanan, music is composed by Pranav Giridharan, and editing is handled by Suresh Arumugam. Produced by Kesava Moorthy under Walkthrough Entertainment, the feel-good film is being distributed by Jenish of Action Reaction.

Speaking about the film, the director said that sales representatives are very much a part of this society, and the screenplay has been shaped to present incidents from their everyday lives as comedy and feel-good entertainment. He added that Gen Z audiences watching the film in theatres will find themselves relating to it and enjoying it. The story follows four friends who work as sales representatives, and their romance, conflicts and comedy have been woven together into two hours of entertainment.

The film’s teaser has already received a positive response online and built up anticipation for the film. The poster released for the announcement has also caught fans’ attention. ‘Cold Call’ is set to release in theatres worldwide on September 18.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

Vijay Antony’s Appakutty Trailer Launch

Vijay Antony’s Appakutty Trailer Launch The trailer of Vijay Antony’s upcoming film Appa Kutty, written and directed by Mu. Maaran, was unveiled at a special event...

கூடு’ – விரைவில் திரையரங்குகளில்!

ஒரு கிராமம்… ஒரு கூடு… 35 நாட்கள் தியாகம்! – ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்களுடன் இணைந்து தனது தமிழ்த் திரைப்படத் தயாரிப்புப் பட்டியலை விரிவுபடுத்தும் பனோரமா ஸ்டுடியோஸ்! ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும்...

Actor Shiva Inaugurates the Third Branch of Nassaa Uth Hub at CDR Mall in Madurai

Actor Shiva Inaugurates the Third Branch of Nassaa Uth Hub at CDR Mall in Madurai Expanding its footprint beyond Chennai, Nassaa Uth Hub brings an exciting...

People’s Film Academy and Channel Five have joined hands to bring this iconic film “SHANKARABHARANAM” back to theatres

திரையரங்குகளில் மீண்டும் 'சங்கராபரணம்' பீப்பிள்'ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் இணைந்து காலத்தால் அழியாத இசைக் காவியமான 'சங்கராபரணம்' திரைப்படத்தை அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியிடுகின்றனர். இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த இசைக் காவியங்களில் ஒன்றான ‘சங்கராபரணம்’ திரைப்படம்,...

Most Popular

spot_img