HomeCinema NewsLEADER MOVIE REVIEW

LEADER MOVIE REVIEW

-

லெஜெண்ட்’ சரவணா தயாரிப்பில் சரவணா அவர்கள் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள படம் லீடர். இந்த படத்தை துரை செந்தில் குமார் இயக்கி உள்ளார். ஆண்ட்ரியா, சாம், VTV கணேஷ் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

நம்ம ஹீரோ சரவணா தூத்துகுடி பகுதியில் கார் மெக்கானிக்காக இருக்கிறார். அதே ஊரில் சால்ட் என்ற பெயரில் ‘பாகுபலி’ பிரபாகர் துறைமுகம் வழியாக கடத்தல் தொழில் செய்து வருகிறார். இவரை கையும் களவுமாக பிடிக்க போலீஸ் அதிகாரிகளாக இருக்கும் ஆண்ட்ரியா மற்றும் ஷாம் திட்டம் தீட்டுகிறார்கள். இந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது. சரவணாவின் மகளை வைத்து ஒரு கடத்தல் நாடகம். போட்டு சரவணணை வைத்து பிரபாகர் செய்யும் அனைத்து சட்டதிற்கு புறம்பான விஷயத்தையும், மீடியா முன் அம்பலப்படுத்துகிறார் ஆண்ட்ரியா. இந்த விஷயம் சரவணனுக்கும், பிரபாகரனுக்கும் இடையேயான மோதலாக மாறுகிறது. இந்த மோதல் சரவணன் யார்? தூத்துக்குடிக்கு வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்? என்ற விஷயங்களை நோக்கி செல்கிறது.

படத்தின் முதல் பாதி சிறு பிசிறு கூட இல்லாமல் மிக வேகமாக நகர்கிறது. வேகமாக நகரும் காட்சிகள், ஆக்ஷன் பிளாக் என படம் பரபரக்கிறது. குழந்தையை தேடி சரவணன் துறைமுகத்திற்குள் செல்லும் காட்சி நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் இருக்கும் வேகமும், பரபரப்பும் இரண்டாம் பாதியில் சற்று குறைவாக உள்ளது. இருந்தாலும் வில்லன் சந்தோஷ் காட்சியில் இருக்கும் ட்விஸ்ட்டால் படம் நிமிர்ந்து விடுகிறது. படம் நகரும் விதம், பரபரக்கும் காட்சிகளும் டைரக்டர் ஹரி இயக்கிய படங்களை நினைவு படுத்துகின்றன.

ஜிப்ரானின் இசை, வெங்கடேஷ் ஒளிப்பதிவு, பிரதீப் எடிட்டிங் இந்த மூன்றும் காட்சிகளை ரசிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த மூன்றில் சபாஷ் போட வைப்பது எடிட்டிங் தான். சரவணா முந்தைய படத்தை விட லீடர் படத்தில் நடிப்பில் சற்றுத் தேறி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

முகத்தை இறுக்கமாக சற்று சோகம் கலந்த நடிப்பை தந்துள்ளார். ரொமான்ஸ் காட்சியில் சற்று ஹோம் ஒர்க் செய்து இருக்கலாம். ஆண்ட்ரியா கம்பீரமும், கனிவும் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்து சபாஷ் சொல்ல வைக்கிறார். இரண்டு வில்லன்களில் சந்தோஷ் மட்டுமே மிரட்டி இருக்கிறார்.

மொத்தத்தில் லீடர் அனைவரும் ரசிக்கும் பொழுது போக்கு படமாக வந்துள்ளது.

லீடர் – ‘அண்ணாசியின் (சரவணா) அட்ரா சிட்டி’

RATINGS : 3.5/5

PRO : NIKIL MURUGAN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

People’s Film Academy and Channel Five have joined hands to bring this iconic film “SHANKARABHARANAM” back to theatres

திரையரங்குகளில் மீண்டும் 'சங்கராபரணம்' பீப்பிள்'ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் இணைந்து காலத்தால் அழியாத இசைக் காவியமான 'சங்கராபரணம்' திரைப்படத்தை அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியிடுகின்றனர். இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த இசைக் காவியங்களில் ஒன்றான ‘சங்கராபரணம்’ திரைப்படம்,...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்! தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான முன்னாள் தலைவர்கள் திரு. எஸ்.ஏ. சந்திரசேகரன், திரு....

TITANIC – KADHALUM KAVUNDHU POGUM MOVIE REVIEW

A refreshing romantic entertainer that takes us through the beautiful journey of love, friendship and unexpected emotions. With an interesting ensemble cast, relatable moments and...

Birla Studios and Neelam Studios unveil ‘IGNORE’, the first single from K. Manikandan-starrer Makkal Kaavalan

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் முதல் பாடலான 'இக்னோர் – IGNORE' வெளியீடு! பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து...

Most Popular

spot_img