HomeCinema NewsArivaan Movie Review

Arivaan Movie Review

-

நேர்மையான அதே சமயம் சர்ச்சை காரணமாக இடமாற்றம் செய்யப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் ஆனந்த் நாக், புதிய காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் அப்பகுதியில் ஒரு சந்தேக மரணம் நிகழ்கிறது. அது விபத்தா ? அல்லது கொலையா ? என்ற பாணியில் விசாரணை மேற்கொள்ள, அடுத்த நாள் அதே பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு ஆண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இரண்டு சம்பவங்களிலும் ஒரு கார் தொடர்புடையதாக இருப்பதால், இரண்டுமே கொலை தான் என்ற முடிவுக்கு வரும் ஆனந்த் நாக், தனது விசாரணையை தீவிரப்படுத்தும் போது, இந்த சம்பவங்களில் பாலியல் தொழிலாளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்.

அந்த பாலியல் தொழிலாளியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்துகிறார். அவர் கொலையாளி பற்றிய தகவலை சொல்ல முயற்சிக்கும் போது, காவல் நிலையத்தில் வைத்தே கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். வழக்கின் முக்கியமான சாட்சியம் இல்லாமல் போனதோடு, காவல் நிலையத்தில் கொலை நடந்ததால் ஆனந்த் நாக்கிற்கு பணி அழுத்தம் ஏற்படுகிறது. அதே சமயம், அதே பகுதியில் மூன்றவதாக ஒரு கொலை நடக்கிறது. கிடைத்த சாட்சியத்தை கைவிட்ட நிலையில், குற்றவியல் நிருபரான நாயகி ஜனனி உதவியுடன் தனது விசாரணையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் ஆனந்த் நாக், கொலையாளியையும், தொடர் கொலைகளுக்கான பின்னணியையும், எப்படி அறிகிறார், என்பதை சொல்வதே ‘அறிவான்’.

தொடர் கொலைகள், அதனை காரணங்களையும், கொலையாளியையும் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியின் விசாரணை என்ற பாணியில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியிலான படங்கள் புதிதல்ல என்றாலும், அதற்கான திரைக்கதை மற்றும் கதை சொல்லலை புதிய கோணத்தில் கையாண்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.அருண் பிரசாத்.

நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் நாக்கிற்கு போலீஸ் வேடம் கச்சிதமாக பொறுந்தினாலும், அதற்கான கம்பீரமான நடிப்பை சற்று தடுமாற்றத்துடனேயே கொடுத்திருக்கிறார். கொலை வழக்கின் விசாரணையில் கவனம் செலுத்துவதை விட உடன் இருக்கும் காவலரை அவ்வபோது கிண்டல் செய்வதேயே வேலையாக வைத்திருக்கும் அவரது விசாரணை முறை மற்றும் அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, வழக்கின் தீவிரத்தை பலவீனப்படுத்தும் விதமாக இருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ஜனனி குணசீலனின் குற்றவியல் நிருபர் கதாபாத்திரம் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டாலும், கதை நகர்வில் அவர் காணாமல் போய் விடுகிறார். பிறகு மீண்டும் அவரை திரைக்கதையில் இடம்பெற செய்வதற்காக, வழக்கில் வலுக்கட்டாயமாக பயணிக்க வைத்திருக்கிறார்கள். இதனால், அவருக்கு படத்தில் பெரிய வேலை இல்லை என்றாலும் தனது குறைவான வேலையை சரியாகவே செய்திருக்கிறார்.

பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர், குருமூர்த்தி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அவ்வபோது படத்தில் தலை காட்டியிருந்தாலும், திரைக்கதையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜியின் பணியில் தனித்துவம் இல்லை என்றாலும், காட்சியமைப்புகளில் தரம் நிறைந்திருக்கிறது.

கார்த்திக்.ஈ.ஆர்.ஏ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் சத்யமூர்த்தி.ஆர், திரைக்கதை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிக்க கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

உண்மை சம்பவம் ஒன்றை பின்னணியாக வைத்துக் கொண்டு, எப்படி ?, எதற்காக ? யார் ?, ஆகிய மூன்று கேள்விகளை மையமாக கொண்ட கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைக்கதையை எழுதியிருக்கும் இயக்குநர் எஸ்.அருண் பிரசாத், ஆரம்பத்தில் கதையை பரபரப்புடனும், எதிர்பார்ப்புடனும் சொன்னாலும், அடுத்தடுத்த  கொலை சம்பவங்கள், அதன் விசாரணை மற்றும் அதில் ஏற்படும் திருப்பங்களை, சாதாரணமாக கையாண்டிருப்பது படத்தை சற்று பலவீனப்படுத்துகிறது.

கொலையாளி யார் ? என்ற உண்மை தெரிந்த பிறகு, கொலைகளுக்கான பின்னணியில் இருக்கும் சமூக பிரச்சனை, கொலையாளியை பிடிப்பதற்கான முயற்சிகள், கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகள் ஆகியவை பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.

முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்து விடும் இயக்குநர் எஸ்.அருண் பிரசாத், தொடர் கொலை சம்பவங்கள் மற்றும் அதன் விசாரணை பகுதிகளிலும், நடிகர்களிடம் வேலை வாங்கிய விதத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த ஆண்டின் சிறந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் இயக்குநராக அறியப்பட்டிருப்பார்.

மொத்தத்தில், ‘அறிவான்’ வெற்றி பெறுவான்.

Casting : Ananth Nag, Janany Kunaseelan, Boys Rajan, Birla Bose, Gowri Shankar,Gurumoorthi

Directed By : S. Arun Prasath

Music By : Karthik ERA

Produced By : MD Films – Durai Mahadevan

Pro A. Raja

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

தனுஷ் படத்தை ஐரோப்பியாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films

தனுஷ் படத்தை ஐரோப்பியாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films *ஓம் திரைப்படத்தை ஐரோப்பியாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films) *ஐரோப்பிய...

F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!

F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது! ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் இயக்கத்தில் தமிழ் – மலையாளம் என இரு மொழிகளில்...

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன! டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, நடிகர்...

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’! *திரைப்பட பாணியில் உருவான அழகான காதல் பயணம் – இயக்குநர் சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் கூட்டணியில்...

Most Popular

spot_img