HomeCinema NewsSweety Naughty Crazy, an all-comedy love story, hits theaters on February 13

Sweety Naughty Crazy, an all-comedy love story, hits theaters on February 13

-

முழுக்க முழுக்க காமெடி கலந்த காதல் கதை ” ஸ்வீட்டி நாட்டி கிரேசி ” பிப்ரவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

காமெடி படமாக உருவாகியுள்ள ” ஸ்வீட்டி நாட்டி கிரேசி ” பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள காமெடி படம் ” ஸ்வீட்டி நாட்டி கிரேசி “பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகிறது.

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கோவை ரமேஷ் தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரித்திருக்கும் படத்திற்கு ” Sweety Naughty Crazy ” ” ஸ்வீட்டி நாட்டி கிரேசி ” என்று இளமை ததும்பும் கலகலப்பான பெயரை வைத்துள்ளனர்.

பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜசேகர்.G இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான த்ரிகுண் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், சாம்ஸ்,மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் இவர்களுடன்
பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல பான் இந்திய பெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கோலிசோடா, கடுகு, சண்டிவீரன் போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

எடிட்டிங் – K. குமார்
சினேகன், பாஸ்கர் S.தேவ் இருவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.
கலை இயக்குனர் – ஜெயகுமார்
நடனம் – I.ராதிகா
தயாரிப்பு – கோவை ரமேஷ்

மூன்று வெவ்வேறு விதமான காதலை மையமாக வைத்து மூன்று கோணங்களில் நடக்கும் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாதான் இந்த படம்.
இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற டிரெண்டிங்கான படமாக இருக்கும்.
படம் பார்க்க வரும் அனைவரும் துவக்கம் முதல் இறுதிவரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அப்படியான காமெடி சரவெடியான திரைக்கதை இது.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினோம்.

சென்னை,ஹைதராபாத்,கோவை, கோத்தகிரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

படம் பிப்ரவரி 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்றார் இயக்குனர் ராஜசேகர்.G

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

தனுஷ் படத்தை ஐரோப்பியாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films

தனுஷ் படத்தை ஐரோப்பியாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films *ஓம் திரைப்படத்தை ஐரோப்பியாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films) *ஐரோப்பிய...

F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!

F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது! ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் இயக்கத்தில் தமிழ் – மலையாளம் என இரு மொழிகளில்...

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன! டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, நடிகர்...

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’! *திரைப்பட பாணியில் உருவான அழகான காதல் பயணம் – இயக்குநர் சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் கூட்டணியில்...

Most Popular

spot_img