HomeCinema NewsActor Sarva stole everyone's heart with "Heart Beat"!!

Actor Sarva stole everyone’s heart with “Heart Beat”!!

-

” ஹாட் பீட் ” மூலம் அனைவரது இதயத்தையும் கொள்ளையடித்த நடிகர் சர்வா!!

நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆர்வம் காட்டும் ” ஹார்ட் பீட் ” வெப் சீரீஸ் மூலம் பிரபலமான இளம் நடிகர் சர்வா!!

ஹார்ட் பீட் வெப் சீரிஸ் புகழ் சர்வா இப்போது வெள்ளித்திரையில் அசத்த ஆரம்பித்துள்ளார் !!

ஹார்ட் பீட் வெப் சீரீஸில் குணா கதாபாத்திரம் மூலம் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதை கைப்பற்றிய இளம் நடிகர் சர்வா. இப்போது வெள்ளித்திரையில் கலக்க ஆரம்பித்துள்ளார்.

இரண்டு சீசன்கள், 200 க்கும் மேற்பட்ட எபிசோடுகளுடன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹார்ட் பீட்” வெப் சீரிஸ் மூலம், சர்வா தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயமான முகமாக மாறினார். ஹார்ட் பீட் சீரிஸ் நான்கைந்து படங்களில் நடித்த அளவு மிகப்பெரிய அனுபவத்தை தந்ததோடு, நண்பர்கள்,ரசிகர்கள் என்னை குணா என்று தான் அழைக்கிறார்கள். அது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன் என்கிறார் நெகிழ்ச்சியோடு நடிகர் சர்வா.

சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றிருக்கும் சர்வா, படிக்கும்போதே நாடகங்கள் நடிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார், தற்போது வெப் சீரிஸில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, தன் திறமையால் இப்போது வெள்ளித்திரையிலும் அசத்த ஆரம்பித்துள்ளார். “ஆர்.கே. நகர” மற்றும் “தமிழ் ராகர்ஸ்” போன்ற படைப்புகளில் முக்கிய கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்துள்ளார். தற்பொழுது, அதர்வா நடிப்பில் இம்மாதம் 12ம் தேதி வெளியாக உள்ள “தணல்” படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனது நடிப்பு திறனை மேலும் சிறப்பாக்க, நெகட்டிவ் கதாபாத்திரங்களை கேட்டு வரும் சர்வா. “நல்ல நெகட்டிவ் ரோல்ஸ் கிடைக்கும்போது தான், நடிப்பின் பல பரிமாணங்களைக் காட்ட முடியும், நல்ல நெகட்டிவ் பாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நல்ல இளம் திறமையாளராக, ஜொலிக்க ஆரம்பித்திருக்கும் சர்வாவிற்கு பல சினிமா வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

*ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!* *லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures)...

நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!*

*நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் 'மின்னும் ஓர் இரவு' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!* *எஸ்.ஆர். பிரபாகரன், மணிகண்டன் இணைந்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்!* *நவம்பர் 27 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!* Watch the...

Sittukurinji Movie Audio Launch

*சிட்டுக்குறிஞ்சி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!* *நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம்!* பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘'சிட்டுக்குறிஞ்சி’. ஃபேண்டஸி...

Vijay Antony starrer “Appa Kutty Pre-release Event

*Vijay Antony Film Corporation Meera Vijay Antony presents A Fathima Vijay Antony Production* *Filmmaker Mu. Maran Directorial* *Vijay Antony starrer "Appa Kutty Pre-release Event Vijay Antony’s Appa Kutty that...

Most Popular

spot_img