HomeCinema NewsMEESHA MOVIE REVIEW

MEESHA MOVIE REVIEW

-

MEESHA MOVIE REVIEW :

Cast and Crew : Kathir, Shine Tom Chacko, Hakkim Shah, Sudhi Koppa, Unni Lalu, Jeo Baby, Srikant Murali, and Hasli Amaan.

கேரளத்தின் வனத்துக்குள் நடக்கும் ஒரு அரசியல் வேட்டை தான் இந்த மீஷா திரைப்படம்.

வனத்துறை காவலராக இருக்கும் கதிர் இல்லீகலாக மான் கறி சாப்பிட தன் நண்பர்கள் இருவரை அழைக்கிறார். அந்த இருவரில் ஒரு நண்பர் ஹக்கீம் ஷா ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர். கதிர் காலணியைச் சேர்ந்தவர். இந்த இருவரின் நட்புக்கும் ஒரு பின்கதை இருக்கிறது. அந்தக் கதையில் ஒரு அரசியலும் இருக்கிறது. ஒரு அரசியல் வாதி ஹக்கீம் ஷாவை வைத்தே கதிரை தீர்த்துக்கட்ட நினைக்கிறார். அந்த அரசியலால் கதிர் பாதிக்கப்படுகிறார். பின் மீண்டெழுகிறார். திரும்பவும் ஆதிக்கம் அவரைச் சீண்ட, நட்பின் துணை கதிரை காப்பாற்றியதா.. வீழ்த்தியதா என்பதே மீஷாவின் மீதிக்கதை.

சின்னதாக நெகட்டிவ் ஸேட் தெரியும்படி முதலில் தோன்றி பின் Full பாசிட்டிவாக நடித்துள்ள கதிர் மலையாளத்தில் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்துள்ளார். ஹக்கீம் ஷா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். வசனமில்லாமல் முகத்தில் அவர் காட்டியுள்ள பெர்பாமன்ஸ் ஆகத்தரம். மற்றொரு நண்பராக வரும் சுதி கன கச்சிதம். ரகு என்ற பெயரில் வரும் அரசியல் வாதியும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார்.

சுரேஷ் ராஜன் தனது கேமராவால் கேரள வனத்தின் மொத்த அழகையும் அள்ளிக்கொண்டு வந்துள்ளார். CG காட்சிகள் அனைத்தும் அருமை. சூரஜ் எஸ்.குருப் தனது தரமான இசையை வழங்கியுள்ளார். பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது

அரசியல் வாதியின் சதி நல்ல நட்பிற்குள்ளும் விசத்தை விதைக்கும் என திரைப்படம் சொல்கிறது. அதற்கான காட்சிப் பின்னல்கள் இன்னும் வலிமையாக இருந்திருக்கலாம். வசனங்களில் இருக்கும் அழுத்தம் திரைக்கதையில் இல்லை. மனிதர்களைப் பிரித்து வைத்துவிட்டு எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற கொடூர நிஜத்தைப் பேசிய படம் மனதில் ஆழமாக பதியவில்லை என்பது தான் சோகம்.

திரில்லர் விரும்பிகள் ஒருமுறை ட்ரைப் பண்ணலாம்.

RATINGS : 4/5

PRO D’one

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

Kryptowalutowe NV Casino Wirtualne – Szeroki wybór gier i nowoczesne mozliwosci

Nowoczesne kasyna internetowe prezentuja róznych wariantów rozgrywki, nowoczesnych funkcjonalnosci oraz rozrywki kasynowej dostepnej przez internet. Informacje o mozliwosciach oferowanych przez kasyna internetowe mozna przeczytac w...

A Celebrated Ode to Love and Relationships, Haiku Arrives on Netflix from November 20

A Celebrated Ode to Love and Relationships, Haiku Arrives on Netflix from November 20 Some stories stay with you long after the curtains fall. Having experienced...

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ – முதல் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது!

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ – முதல் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது! ‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும்...

பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்! Zee 5, பல்வேறு வகைகளில் தரமான பிராந்தியக் கதைகளை...

Most Popular

spot_img