HomeCinema NewsRegina Cassandra achieved Pan India star status

Regina Cassandra achieved Pan India star status

-

பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் ரெஜினா கசாண்ட்ரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. ‘அழகிய அசுரா’ படத்தில் கதாநாயகியான ரெஜினா கசாண்ட்ராவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தந்தன.

இதனை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அங்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

ரெஜினா கசாண்ட்ரா தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘நிர்ணயம்’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’, ‘விடாமுயற்சி’, ‘பார்டர்’, ‘ஃப்ளாஸ் பாக்’ ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘விடா முயற்சி’ படத்தில் யாரும் எதிர்பாராத தோற்றத்தில் நடித்து அசர வைத்தார். இவரது வில்லத்தனமான நடிப்புக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்தது. தற்போது இந்தி படங்களான சன்னி தியோலுடன் ‘ஜாத்’, அக்ஷய் குமார், அனன்யா பாண்டேவுன் ‘ கேசரி 2’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து தமிழில் சுந்தர்.சி. இயக்கத்தில் மூக்குத்தி அம்மன்2-ம் பாகத்திலும் என பிசியாக நடித்து வருகிறார். இதனால் ரெஜினா கசாண்ட்ரா பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

100 படங்களைக் கடந்து புதிய பயணத்தில்… முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் சாம் சி எஸ்!

*#RAPO23 டைட்டில் டீசர்… ; நாளை வெளியாகும் ‘சத்யவான் சாவித்திரி’, அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் பிஸியாகும் சாம் சி எஸ்!* 100 படங்களைக் கடந்து புதிய பயணத்தில்… முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் சாம்...

போலியோ முதல் HPV வரை பொது சுகாதாரப் பணியைத் தொடரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்

போலியோ முதல் HPV வரை: பொது சுகாதாரப் பணியைத் தொடரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தமிழ்நாடு முழுவதும் HPV தடுப்பூசி விழிப்புணர்வுக்கு பொது சுகாதாரத் துறை ஆதரவு; 2029 நூற்றாண்டுக்குள் 10 லட்சம் சிறுமிகளைப்...

நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ” நெல்லை பாய்ஸ் ” 

நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் " நெல்லை பாய்ஸ் " தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் " நெல்லை பாய்ஸ் " நவம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. "...

யுவா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் மதுர மோசடி’ – விரைவில் திரைக்கு வருகிறது!

யுவா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் மதுர மோசடி’ – விரைவில் திரைக்கு வருகிறது! சிட்பண்ட் மோசடியை மையமாகக் கொண்டு குடும்ப உணர்வுகளுடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதுர மோசடி’. யுவா ஃபிலிம்ஸ் சார்பில் எஸ். சங்கரநாராயணன் தயாரித்துள்ள இப்படத்தை...

Most Popular

spot_img