HomeUncategorizedMaadan Kodai vizha Movie Review

Maadan Kodai vizha Movie Review

-

Maadan Kodai vizha Movie Review :

மாடன் கொடை விழா கோலாகல கொடை விழா

தன் கிராமத்தை விட்டு சென்னையில் சென்று பணிபுரிகிறார் நாயகன் கோகுல்.. இவரது பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று ஊருக்கு வர சொல்கிறார்கள்.. வந்த பிறகு தான் தெரிகிறது ஊரில் நின்று போன சுடலை மாடன் கொடை விழாவை நடத்த வேண்டும் என்கின்றனர்.

இவர்கள் குடும்பம் கொடை விழாவை நடத்தி வரும் நிலையில் இவரது தந்தை சூப்பர் குட் சுப்ரமணி கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதால் இனி கோகுல் தான் கொடை விழாவை நடத்த வேண்டும் என கிராமத்து மக்கள் விரும்புகின்றனர்.

இதன் இடையில் தந்தை ஒரு சிகிச்சைக்காக தனது சொந்த நிலத்தை (சுடலைமாடன் இருக்கும்) நிலத்தை வில்லனிடம் அடமானம் வைக்கவே அவரோ அதை தன் பெயரில் எழுதிக் கொள்கிறார்.

இதனால் நிலத்தை மீட்பதிலும் சிக்கல் வருகிறது.. நிலம் இல்லாமல் சுடலைமாடன் கொடை விழாவை நடத்த முடியாத சூழ்நிலையில் இருதரப்புக்கும் பிரச்சினை வருகிறது.. அப்போது எதிர்பாராத விதமாக வில்லன் அடியாளை கொன்று விடுகிறார் நாயகன் கோகுல் கெளதம்..

அதன் பிறகு என்ன நடந்தது? சுடலைமாடன் கொடை விழா நடந்ததா? ஜெயிலுக்கு சென்ற நாயகன் திரும்பி வந்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

கோகுல் கவுதம், ஷர்மிஷா, டாக்டர் சூர்ய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணியம், ஶ்ரீபிரியா, பால்ராஜ், மாரியப்பன், சிவவேலன், ரஷ்மிதா மற்றும் பலர்

பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்கள் எதிர்பார்ப்புக்கு உள்ளானதாக இருக்கும் ஆனால் நாம் எதிர்பார்த்த விஷயம் இருக்காது.. ஆனால் ‘மாடன்’ போன்ற படங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தாலும் அனைத்து கலைஞர்களும் தங்களது பங்களிப்பை மிகச் சரியாக செய்திருக்கின்றனர்.

நாயகன் கோகுல், நாயகி சாருமிஷா சித்தப்பா கேரக்டர், திருநங்கை மாதிரி உள்ளிட்ட பலரும் தங்கள் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர்..

நாயகி சாருமிஷா நெல்லை பாஷையில் சபாஷ் பெறுகிறார்.. இவரது துருதுருப்பான கேரக்டர் படத்திற்கு பிளஸ் பாயிண்ட்..

திரைக்குப் பின்னால் ……
தயாரிப்பு :- கேப்டன் சிவபிரகாசம் உதயசூரியன் .
கதை, திரைக்கதை
இயக்கம்:- இரா. தங்கபாண்டி
( முதல் படம்).
கேமரா :- சின்ராஜ் ராம்
இசை : விபின். ஆர்.

தங்கப்பாண்டி என்பவர் இயக்கி இருக்கிறார்.. கிராமத்து மண் மனம் மாறாமல் மாடனை அழகாக கொடுத்திருக்கிறார்.. சின்ராஜ் ராம் என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் கிராமத்துக் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார்..

இசையமைப்பாளர் விபின் தன் இசையின் மூலம் இந்த மாடனுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.. பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.. முக்கியமாக கிளைமாக்ஸ் சுடலைமாடன் லோ பட்ஜெட் காந்தாரா..

Ratings : 4.5/5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

SIGNAL at 11:30 Movie Review

இளம் தொழிலதிபரான சந்தோஷ் பிரதாப், தன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கிறார். அப்போது சரியாக இரவு 11:30 மணியளவில் சிக்னல் ஒன்றில் நிற்கும் போது, இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒரு பெண்ணை...

DELIVERY BOY MOVIE REVIEW

காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லியோ சிவக்குமார், உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். திடீரென்று அவரது அம்மா ராதிகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட, அவரை காப்பாற்றுவதற்காக துஷ்யந்திடம் இருக்கும் பணத்தை திருடி விடுகிறார்....

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்! அப்பாவின் அருமையையும், அவரது அன்பையும், பிரிவால் ஏற்படும்...

JEDUSI MOVIE REVIEW

சக்தி என்ற இளைஞனுக்கும் காவேரிக்கும் இடையிலான எதிர்காலக் கனவுகள், சென்னையில் கல்லூரி நிர்வாகத்தினரால் காவேரி எதிர்கொள்ளும் சுரண்டலால் சிதைகின்றன. அதன் பின்னர் கிராமத்தில் உருவாகும் கோபம், சமூகப் பிரச்சினைகள் மற்றும் நீதிக்கான போராட்டம் ஆகியவற்றை...

Most Popular

spot_img