HomeUncategorizedAgathiyaa Movie Review

Agathiyaa Movie Review

-

AGATHIYAA REVIEW :

பிரபல பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் அகத்தியா திரைப்படத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் இப்படத்தின் திரை விமர்சனம் இதோ. அகத்தியா கதை: பழமையான வீட்டில் இருக்கும் பியானோ ஒன்று சுதந்திர காலத்துக்கு செல்லும் போர்ட்டலை உருவாக்கும் சக்தியை பெற்று இருக்கும். அதை அடைய சித்தா பயிற்சியாளர் மற்றும் வில்லன் முயற்சி செயய் என்ன நடிக்கிறது என்பதுதான் கதை.

பாடலாசிரியர் பா விஜயின் எழுத்தில் படத்தின் கதை வித்தியாசமாக அமைந்துள்ளது. வித்தியாசமான விஷயங்களை முன்வைக்கிறார். பேயாட்டம் நிறைந்த வீடுகள், காலனித்துவ வில்லன்கள், மற்றும் மந்திரமயமான மருந்துகள். சில இடங்களில் படம் குழப்பத்தையே கொடுத்தாலும் திரைக்கதை அதை பெரிதாக பாதிக்காமல் பார்த்து கொள்கிறது. எப்போதும் போல ஜீவா நடிப்பில் அசத்தினாலும் முதன்முறையாக அர்ஜூன் பல ஆண்டுகள் கழித்து மாந்திரீக படத்துக்குள் வந்துள்ளார். ராஷி கண்ணாவுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை. படத்துக்கு நல்ல செலவு பண்ணிருக்காங்க. விஎப்எக்ஸ் அருமையா இருக்கு. அர்ஜூன் நடிப்பு சூப்பர்.

இப்படத்தில் மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது வி எப் எக்ஸ் காட்சிகள் தான். எந்த இடத்திலும் குளறுபடி இல்லாமல் சரியாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எடிட்டிங்கில் படம் சில இடங்களில் சொதப்பலை ஏற்படுத்தி ரசிகர்களை கடுப்பாக்கவும் தவறவில்லை. படம் சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ரசிக்கும்படியான ஒரு ஹாரர் திரைப்படமாக அகத்தியா அமைந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்க்கும் போது நல்ல அனுபவமாக அமையும் எனவும் கூறலாம்.

Ratings : 3/5

Previous article
Next article

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

SIGNAL at 11:30 Movie Review

இளம் தொழிலதிபரான சந்தோஷ் பிரதாப், தன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கிறார். அப்போது சரியாக இரவு 11:30 மணியளவில் சிக்னல் ஒன்றில் நிற்கும் போது, இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒரு பெண்ணை...

DELIVERY BOY MOVIE REVIEW

காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லியோ சிவக்குமார், உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். திடீரென்று அவரது அம்மா ராதிகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட, அவரை காப்பாற்றுவதற்காக துஷ்யந்திடம் இருக்கும் பணத்தை திருடி விடுகிறார்....

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்! அப்பாவின் அருமையையும், அவரது அன்பையும், பிரிவால் ஏற்படும்...

JEDUSI MOVIE REVIEW

சக்தி என்ற இளைஞனுக்கும் காவேரிக்கும் இடையிலான எதிர்காலக் கனவுகள், சென்னையில் கல்லூரி நிர்வாகத்தினரால் காவேரி எதிர்கொள்ளும் சுரண்டலால் சிதைகின்றன. அதன் பின்னர் கிராமத்தில் உருவாகும் கோபம், சமூகப் பிரச்சினைகள் மற்றும் நீதிக்கான போராட்டம் ஆகியவற்றை...

Most Popular

spot_img