HomeUncategorizedLaara Movie Review

Laara Movie Review

-

லாரா படத்தில் அசோக் குமார், கார்த்திகேசன், அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, பாலா, எஸ். கே. பாபு, திலீப்குமார், இ.எஸ். பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர். மணி மூர்த்தி இந்த படத்தை இயக்கி உள்ளார். ஆர் ஜே ரவீன் ஒளிப்பதிவு செய்ய, ரகு ஸ்ரவன் இசையமைத்துள்ளார், கார்த்திகேசன் லாரா படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் கதை

லாரன்ஸ் என்பவர் தனது மனைவி ஸ்டெல்லாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறார். இந்நிலையில் காரைக்கால் பகுதியில் உள்ள நிரவி காவல் நிலையத்திற்கு ஒரு தகவல் வருகிறது. ஒரு பெண்ணின் உடல் கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்கிறது. அந்த பெண்ணின் உடல் முகம் தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளது. யார் என்று அடையாளம் காண முடியாத அளவிற்கு முகம் சிதைவுற்று, உடலில் சில பாகங்கள் சேமடைந்த நிலையில் இருக்கிறது. இதையடுத்து லாரன்ஸிடம் இது உன் மனைவியா என்று அடையாளம் காட்ட சொல்லி காவல்துறையினர் அழைத்து செல்கின்றனர். ஆனால் அது என் மனைவி இல்லை என்று லாரன்ஸ் தெரிவிக்கிறார்.

இந்நிலையில் தன் மனைவியை தானே கொலை செய்துவிட்டு லாரன்ஸ் நாடகம் ஆடுகிறான் என்று தொலைபேசி வாயிலாக காவல் நிலையத்திற்கு தகவல் வருகிறது. இதனால் லாரன்ஸைச் சந்தேகித்த போலீஸ் அவனது நடவடிக்கைகளைக் தொடர்ந்து கண்காணிக்கிறது. அப்போது லாரன்ஸ் எதையோ மறைகிறார் என்றும், அவனுக்குள் ஏதோ ரகசியம் ஒளிந்து இருப்பதாக காவல்துறையினர் சந்தேகம் அடைகின்றனர். ஆனாலும் சரியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர். அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விசாரணையை வெவ்வேறு திசைகளுக்கு கூட்டி செல்கிறது.

அப்படி போகும் வழியில் தோண்டத் தோண்ட மர்மங்களும் நிகழ்கின்றன. ஹவாலா பணம் மோசடி, பாலியல் தொழில் செய்யும் பெண்கள், அவர்களைக் கொடுமைப்படுத்தப்படும் மர்ம மனிதர்கள், லாராவின் காதல் கதை, ஆதரவற்றோர் இல்லம், ஆயுதங்கள் தயாரிப்பு என்று கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. பரபரப்பாக படம் போய்க் கொண்டிருக்கும் போது லாராவின் காதல் கதை அத்தியாயம் விரிகிறது. ஒரு கட்டத்தில் போலீஸின் அத்தனை சந்தேகங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு வேறொரு திருப்பம் நிகழ்கிறது. அந்தக் காதல் கதைக்கும் இந்த கொலை கதைக்கும் என்ன தொடர்பு? உண்மையில் லாரன்ஸ் மனைவிக்கு என்ன ஆனது என்பதே லாரா படத்தின் கதை.

வளர்ந்து வரும் நாயக நடிகர் அசோக் குமார் தனக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். குறைந்த காட்சிகளே இருந்தாலும், நன்றாக நடித்துள்ளார். போலீசார் விசாரணை செய்யும் காட்சிகள் நீளமாக இருந்தாலும் சலிப்பூட்டாமல் உள்ளது. லாராவாக அனுஷ்ரேயா ராஜன் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். மேலும் பாலா, எஸ் கே பாபு, திலீப்குமார், இ.எஸ். பிரதீப் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஆர் ஜே ரவீன் ஒளிப்பதிவு, ரகு ஸ்ரவண் குமார் இசை ஒரு க்ரைம் திரில்லருக்குத் தேவையான படத்திற்கு உதவி உள்ளது. நகைச்சுவைக் காட்சிகள் என்று தனியாக எதுவும் இல்லை என்றாலும் அந்தந்த காட்சிகளில் நடக்கும் விஷயங்கள் சிரிப்பை ஏற்படுத்துகிறது.

படத்தில் வரும் பாடல்கள் பெரிதாக ரசிக்க வைக்கவில்லை என்றாலும், பின்னணி இசை குறை சொல்ல ஒன்றும் இல்லாமல் நிறைவைத் தருகிறது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கதை நடந்தாலும் காட்சிகளில் சோர்வு வெளிப்படாமல் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கும் லாரா நிச்சயம் பிடிக்கலாம்.

Ratings: 3/5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

Shah Rukh Khan and Kareena Kapoor Khan reunite after 15 years to set the dance floor on fire with ‘Daddy Cool (King Version)’ from...

*15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஷாருக்கான் – கரீனா கபூர் கான்… ‘கிங்’ படத்தின் ‘டாடி கூல்’ பாடல் வெளியீடு!* *மெட்டாவின் ‘ஹவுஸ் ஆஃப் இன்ஸ்டாகிராம் 2026’ நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக வெளியான ஷாருக்கான் –...

SIGNAL at 11:30 Movie Review

இளம் தொழிலதிபரான சந்தோஷ் பிரதாப், தன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கிறார். அப்போது சரியாக இரவு 11:30 மணியளவில் சிக்னல் ஒன்றில் நிற்கும் போது, இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒரு பெண்ணை...

DELIVERY BOY MOVIE REVIEW

காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லியோ சிவக்குமார், உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். திடீரென்று அவரது அம்மா ராதிகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட, அவரை காப்பாற்றுவதற்காக துஷ்யந்திடம் இருக்கும் பணத்தை திருடி விடுகிறார்....

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்! அப்பாவின் அருமையையும், அவரது அன்பையும், பிரிவால் ஏற்படும்...

Most Popular

spot_img