Maari Selvaraj in Vaazhai Movie Review

உண்மை சம்பவத்தின் சில பக்கங்கள்… வாழை – திரை விமர்சனம்!

Vaazhai

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்துவரும் சிறுவன் சிவணைந்தன் படிப்பில் கெட்டிக்காரன். என்ன சேட்டைகள் செய்தாலும், ஊரெல்லாம் திரிந்தாலும் வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். ஆனால், வறுமையான குடும்பம். வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக அம்மாவின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாள்களில் வாழைத்தார் சுமக்க உடன் அழைத்துச் செல்லப்படுகிறான்.

20 கிலோ எடையுள்ள தார்களை சிறுவன் சுமப்பதும், அதனால் உடல்வலியால் அழுவதுமாக அந்த வாழ்க்கையை வாழ்பவர்களின் பாரம் கடத்தப்படுகிறது. வாழைத்தார் சுமப்பதிலிருந்து ஒருநாள் விலக்கு கிடைத்தாலும் சிறுவர்களுக்கு மிகப்பெரிய விடுதலை கிடைத்ததுபோல் இருக்கிறது.

ஒருபக்கம், சிவணைந்தனின் ஏழ்மையும், வேறு வழிய…தான் சாட்சியாக இருந்த சம்பவத்தை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் மாரி செல்வராஜ். அழகான, சுவையான வாழைப்பழத்திற்குப் பின் அதற்காக உழைத்தவர்கள் என்னென்ன பாடுகளைப்பட்டார்கள் என்பதைப் பார்க்கும்போது உணர்ச்சிகள் பெருகுகின்றன. பசிக்கும் பஞ்சத்திற்கும் முன் என்ன நடந்தாலும் அவையெல்லாம் நம் கண்ணுக்கே தெரியாது.

அப்படி ஒரு காட்சி இப்படத்தில் இருக்கிறது. படத்தின் மிகச்சிறந்த காட்சியும், நம்மை உடைக்கும் காட்சியும் அதுதான். கருப்பு வெள்ளை காட்சியில் துவங்கும் திரைப்படம் இறுதியில் நம்மை உலுக்கும் காட்சிகளுடன் நிறைவடைகிறது. மீண்டும் மீண்டும் என் சினிமா, என் மக்கள்பட்ட வலிகளைப் பதிவு செய்வதுதான் என்பதில் மாரி செல்வராஜ் வைத்திருக்கும் உறுதி வாழையில் நன்றாகவே தெரிகிறது.

நம்மை சோகப்படுத்தும் காட்சிகளுக்கு நடுவே சிரிக்கவும் வைத்திருக்கிறார். முக்கியமாக, சிவணைந்தனும் சேகரும் வாழைத்தார் சுமப்பதிலிருந்து பல பொய்களைச் சொல்லி தப்பிக்க முயற்சிக்கின்றனர். ரஜினி ரசிகனாக சிவணைந்தன் தன் காலில் முள்ளைக் குத்தி ரத்தம் வர வைக்கிறான்.

’டேய் சேகரு நீயும் குத்திக்கடா.. இதை வைச்சு தார் சுமக்கறதுல இருந்து தப்பிச்சர்லாம்’ . கமல் ரசிகனான சேகர், ‘நான் கமல் ரசிகன். ரத்தம் வராமலே வந்த மாதிரி நடிப்பேன்டா பைத்தியகாரபயலே’ என்றபடி வீட்டுக்குச் செல்கிறான். ஆனால், அங்கு பொய் சொல்லி மாட்டிக்கொள்கிறான். உண்மையாகவே, ரத்தம் வந்த சிவணைந்தன் அன்று தப்பித்துவிடுகிறான். சேகர், “ம்ம்.. நம்ம ஊர்ல ரஜினி படம்தான் ஓடுது.. கமல் படம் எங்க ஓடுது?” என்கிறான். இருவருக்குமான காட்சிகள் பல இடங்களில் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.

சிவணைந்தனாக நடித்த பொன்வேல் மற்றும் சேகராக …
நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நடிகை நிகிலா விமலுக்கு பெயர் சொல்லும் படமாகவே வாழை அமைந்திருக்கிறது. அழகான, அன்பான ஆசிரியையாக அவர் வரும் காட்சிகளெல்லாம் பழைய நினைவுகளுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு தமிழ் சினிமாக்களை உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன. அவர் இந்தியளவில் நல்ல படங்களை செய்யத் தகுதியான கலைஞர். வாழை படத்திலும் வாழைத் தார்களை சுமக்கும் உழைப்பாளிகளின் வாழ்க்கை, நிகிலா விமலின் காட்சிகள், கிளைமேக்ஸ் என ஒளிப்பதிவில் பசுமையையும் சுமையையும் கொண்டு வந்திருக்கிறார். பாடல்களைப் பதிவு செய்த விதத்திலும், கதாபாத்திரங்களுக்கான குளோஸப் காட்சிகளிலும் ஒளிப்பதிவு சிறப்பு.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்குக் கூடுதலாக ஒரு பக்கமே ஒதுக்கலாம் என்பதுபோல் இப்படத்தில் பாடல்களையும் பின்னணி இசையும் அபாரமாகச் செய்திருக்கிறார். கலையரசனுக்கும் வாழைத்தார் முதலாளிக்குக்கும் இடையேயான சம்பள உயர்வு பிரச்சனையை இன்னும் நல்ல வசனங்களால் நிறைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

மாரி செல்வராஜின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது வாழையும் தனித்து தெரிகிறது. சாதாரண செய்தி என நாம் கடந்த சென்றதற்குப் பின், எவ்வளவு ரணம் இருந்திருக்கிறது என்பதை வலியுடன் சொல்லியிருக்கிறார்.

தன் சொந்த வாழ்வின் அனுபவங்களை வைத்தே திரைப்படங்களை இயக்கும் மாரி செல்வராஜ், வாழை படத்திலும் சிறுவயதில் தான் அனுபவித்த ஒன்றையே பதிவு செய்திருப்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது. படம் முடிந்ததும் நம்முடைய குழந்தைப் பருவங்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவை என்பதை உணர்வோம். வாழை – நிச்சயமாக பார்க்கலாம். 

Ratings : 4/5

Leave a Response