HomeCinema NewsSIGNAL at 11:30 Movie Review

SIGNAL at 11:30 Movie Review

-

இளம் தொழிலதிபரான சந்தோஷ் பிரதாப், தன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கிறார். அப்போது சரியாக இரவு 11:30 மணியளவில் சிக்னல் ஒன்றில் நிற்கும் போது, இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒரு பெண்ணை இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் துரத்தி செல்கிறார்கள். அவர்களை பின் தொடர்ந்து செல்லும் சந்தோஷ் பிரதாப், ஒரு இடத்தில் அந்த பெண் பயணித்த இரு சக்கர வாகனத்தை பார்த்து, அந்த இடத்தில் அந்த பெண்ணை தேடுகிறார். அவர் கிடைக்காததால் அங்கிருந்து செல்பவர், சம்பவம் பற்றி காவல் நிலையத்தில் தகவல் அளிக்கிறார்.

இதற்கிடையே, வேலைக்கு சென்ற பவ்யா ட்ரிகா, இரவு முழுவதும் வீடு திரும்பாததால் அவரது தந்தை ஜெயப்பிரகாஷ் தேடுகிறார். அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட, அவர் சந்தோஷ் பிரதாப் வீட்டில் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறார். சந்தோஷ் பிரதாப் யார் ?, அவர் எதற்காக பவ்யா ட்ரிகாவை அடைத்து வைத்திருக்கிறார் ? என்பதை பல மர்ம முடிச்சுகளோடு சொல்வதே ‘சிக்னல் அட் 11.30’.

மர்மமும் திரில்லரும் நிறைந்த திரைக்கதையில், சந்தோஷ் பிரதாப்பின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு படத்திற்குப் பெரிய பலம் சேர்த்திருக்கிறது. நள்ளிரவுப் பயணம், அதில் சந்திக்கும் எதிர்பாராத சம்பவத்தால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பதற்றத்தோடும், பயத்தோடும் எதிர்கொள்ளும் காட்சிகளிலும், அதன் பிறகு அவர் யார் ? என்ற உண்மை தெரிந்தப் பிறகு வெளிப்படுத்தும் காட்சிகளிலும் மிக சிறப்பாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

வழக்கமான கதாநாயகி வேடங்களைத் தாண்டி, அழுத்தமான கதாபாத்திரத்தை சூழ்நிலைக்கு ஏற்ப மிகையில்லாமல், இயல்பாக உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் கவனம் ஈர்க்கிறது.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னடா, காதல், டூயட் என்று கமர்ஷியல் அம்சங்களுக்கு பயன்பட்டிருப்பதோடு, திரைக்கதையின் முக்கிய திருப்பமாக பயணித்திருக்கிறார்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த் ஆகியோரது திரை இருப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, இரவு நேரத்தின் அமைதி, கொடைக்கானலின் அழகு மற்றும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான நடிப்பு ஆகிய அனைத்தையும் மிக துள்ளியமாக படமாக்கி படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார்.

RATINGS :  3/5

PRO : D’one

LATEST POSTS

DELIVERY BOY MOVIE REVIEW

காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லியோ சிவக்குமார், உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். திடீரென்று அவரது அம்மா ராதிகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட, அவரை காப்பாற்றுவதற்காக துஷ்யந்திடம் இருக்கும் பணத்தை திருடி விடுகிறார்....

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்! அப்பாவின் அருமையையும், அவரது அன்பையும், பிரிவால் ஏற்படும்...

JEDUSI MOVIE REVIEW

சக்தி என்ற இளைஞனுக்கும் காவேரிக்கும் இடையிலான எதிர்காலக் கனவுகள், சென்னையில் கல்லூரி நிர்வாகத்தினரால் காவேரி எதிர்கொள்ளும் சுரண்டலால் சிதைகின்றன. அதன் பின்னர் கிராமத்தில் உருவாகும் கோபம், சமூகப் பிரச்சினைகள் மற்றும் நீதிக்கான போராட்டம் ஆகியவற்றை...

NIRAM MOVIE REVIEW

NIRAM திரைப்படம் வழக்கமான காதல் அல்லது குடும்பக் கதையிலிருந்து விலகி, மர்மம் மற்றும் குற்ற விசாரணையை மையமாகக் கொண்ட ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கதையின் அடிப்படை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட திரில்லர்...

Most Popular

spot_img