HomeCinema Newsஇயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

-

இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

நடிகர் மித்துன் மாணிக்கம் நடிக்கும் ‘ஃபேமிலி பாய் – (Family Boy)’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

தமிழ் சினிமாவில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் திறமையான நடிகர் மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய் – Family Boy’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீராகணம்..’ எனும் முதல் பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் – (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மித்துன் மாணிக்கம் தயாரித்திருக்கிறார். அவருடன் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP – Milliennials Movie Production L L P நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முஹம்மத் கனி ஃபைசல்- டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சரியா.. சதியா.. நீ என் சகி.. மதியா.. விதியா.. நீ கண்மணி.. இறையா.. இரையா.. இதயம் நீயா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடலைப் இப்படத்தின் இயக்குநர் மித்துன் மாணிக்கம் எழுத, பின்னணிப் பாடகர் ஆதித்யா RK, பின்னணிப் பாடகிகள் மால்வி சுந்தரேசன் மற்றும் அபர்ணா நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். காதல் பாடலாகவும் மெலோடியாகவும் உருவாகியிருக்கும் இந்தப் பாடல், இசை ரசிகர்களைக் கடந்து இளைய தலைமுறையினரையும் வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

மேலும், இந்தப் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவின் தொடக்கத்தில் ‘அணுவும் அண்டமும்… அவளும் யானும்… அனைத்தும் காதலே… அவள் என் தீராகணமே…’ என்ற கவிதையுடன் தொடங்குவது, இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியரும் இயக்குநருமான மித்துன் மாணிக்கம், நடிகர் சூர்யாவால் கண்டறியப்பட்ட திரைப் பொக்கிஷம் என்பதை உறுதிப்படுத்துவதுடன், பாடலை முழுமையாகக் கேட்கத் தூண்டுகோலாகவும் திகழ்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

LATEST POSTS

TITANIC – KADHALUM KAVUNDHU POGUM MOVIE REVIEW

A refreshing romantic entertainer that takes us through the beautiful journey of love, friendship and unexpected emotions. With an interesting ensemble cast, relatable moments and...

Birla Studios and Neelam Studios unveil ‘IGNORE’, the first single from K. Manikandan-starrer Makkal Kaavalan

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் முதல் பாடலான 'இக்னோர் – IGNORE' வெளியீடு! பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து...

With a heart full of love and gratitude, I’m so happy to share that Raj and I got married on November 11(Today), in a...

அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நவம்பர் 11ஆம் தேதி(இன்று), எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில், எனக்கும் ராஜ்-க்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. இத்தனை ஆண்டுகளாக என்...

Shah Rukh Khan’s Tu Mil Jaaye Tops Ormax Heartbeats’ Top 5 Songs Of The Week, Fans Can’t Get Enough Of The Track

ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye)! நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கிங்’ (King)...

Most Popular

spot_img