HomeCinema Newsகோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக...

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!

-

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!

Movietron Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), இந்தியன் பனோரமா ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், உலக அளவில் கவனம் பெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ள தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘அறிவு’ பெற்றுள்ளது.

சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ‘உறியடி’ விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண் உரிமைகள் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, வலுவான சமூகச் செய்தியுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுடன் கூடிய கருத்துகளை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்லும் படைப்பாக ‘அறிவு’ உருவாகியுள்ளது. இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக சாய்பிரபு ஜெயக்குமார் செயல்படுகிறார்.

‘அறிவு’ திரைப்படத்தில் I. M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். D. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனித்துள்ளார். கலை இயக்குநராக S.K. பணியாற்றியுள்ளார். ராமு M. தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், அரவிந்த் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், தென்னரசு தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர்.

படம் வெளியாவதற்கு முன்பே இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியிருப்பது ‘அறிவு’ திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகும். மேலும், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே உலகத் திரைப்பட அரங்கில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது ‘அறிவு’.

பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றுள்ள அங்கீகாரத்துடன் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

உலகத் திரைப்பட விழாவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்துடன், Movietron Production நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள ‘அறிவு’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

LATEST POSTS

Birla Studios and Neelam Studios unveil ‘IGNORE’, the first single from K. Manikandan-starrer Makkal Kaavalan

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் முதல் பாடலான 'இக்னோர் – IGNORE' வெளியீடு! பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து...

With a heart full of love and gratitude, I’m so happy to share that Raj and I got married on November 11(Today), in a...

அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நவம்பர் 11ஆம் தேதி(இன்று), எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில், எனக்கும் ராஜ்-க்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. இத்தனை ஆண்டுகளாக என்...

இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்! நடிகர் மித்துன் மாணிக்கம் நடிக்கும் ‘ஃபேமிலி பாய் - (Family Boy)’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு! தமிழ் சினிமாவில் நம்பிக்கை அளிக்கும் வகையில்...

Shah Rukh Khan’s Tu Mil Jaaye Tops Ormax Heartbeats’ Top 5 Songs Of The Week, Fans Can’t Get Enough Of The Track

ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye)! நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கிங்’ (King)...

Most Popular

spot_img