நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான, ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது!*
சமீபத்தில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம், அதன் விறுப்பான கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு பெற்று வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொடுத்து வரும் இந்த வரவேற்பு படக்குழுவினரையும் உற்சாகப்படுத்டியுள்ளது.
ஊடகங்கள் மத்தியிலும் இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இயக்குநரின் அணுகுமுறை, நடிகர்களின் நடிப்பு மற்றும் வலுவான உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட கதை சொல்லல் ஆகியவற்றுக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ரசிகர்களிடையே உருவாகியுள்ள நேர்மறையான ‘வேர்ட் ஆஃப் மவுத்’ வரவேற்பும் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்து வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜிதேஷ் விஸ்வாம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபால் தயாரித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம், அதன் வலுவான உள்ளடக்கம் மற்றும் கதை சொல்லல் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இயக்குநர் சஜீவ் பழூர் பகிர்ந்து கொண்டதாவது, “விருதுகள் மட்டுமே திரைப்பட இயக்குநர்களை இன்னும் சிறந்த படங்களை உருவாக்குவதற்கு ஊக்கப்படுத்துவதில்லை. ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரமும் அதே அளவு முக்கியமானது. தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல கதைகளுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள். அந்த வகையில், ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் இந்த அமோக வரவேற்பு எங்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. பல பகுதிகளில் ’என்ன விலை‘ திரைப்படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இந்தப் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரமாகவே பார்க்கிறோம்.
‘என்ன விலை’ படத்திற்கு ஆதரவளித்த ஒவ்வொரு ரசிகருக்கும், தங்களது பாராட்டுகளைத் தெரிவித்த ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாட்களில் இப்படம் இன்னும் சிறப்பான வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் நடிகர்களுக்கும் இயக்க்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களும் இது உற்சாகமும் ஊக்கமும் தரும்” என்றார்.
ENNA VILAI’ RECEIVES OVERWHELMING RESPONSE FROM AUDIENCE AND MEDIA
Strong Theatrical Reception for the Sajeev Pazhoor Directorial
The recently released film ‘Enna Vilai’ has been receiving an overwhelming response from audiences in theatres, with the film striking a strong chord with viewers through its engaging narrative, performances and content.
Written and directed by Sajeev Pazhoor, the film has generated considerable interest for its distinctive premise and treatment. The audience response in theatres has been particularly encouraging, with viewers appreciating the film’s content, performances and the manner in which the story unfolds.
The film has also received appreciation from the media, with positive feedback for the director’s approach, performances and content-driven storytelling. The encouraging response has created a growing buzz around the film, with strong word-of-mouth further contributing to audience interest.
A significant indication of the film’s reception is the increase in the number of theatre screens in several places, as exhibitors respond to the growing demand and audience interest. The expansion in screens has further strengthened the film’s theatrical journey.
Produced by Githesh Vishwambaran and Anugopal Venugopal, Enna Vilai continues to connect with audiences through its content and storytelling.
Director Sajeev Pazhoor said:
“Awards alone are never enough to encourage filmmakers to make better films; the rewards that come from the audience matter just as much. We know for a fact that Tamil audiences are far ahead when it comes to recognising and supporting good content. The overwhelming response to Enna Vilai gives us immense confidence. The fact that our theatre screens are increasing in many places is particularly encouraging and, to us, is a clear endorsement of the quality of the film and the audience’s acceptance of it.
“I sincerely thank every audience member who has supported Enna Vilai and the media for their appreciation. We are confident that the film will achieve even better results in the coming days. More importantly, we hope this response will inspire producers and directors to come forward with more films that are driven by strong content and meaningful storytelling.”




