திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வெளிப்பிரகாரத்தில் உலா வந்த சொகுசு கார். நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை.*

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வெளிப்பிரகாரத்தில் உலா வந்த சொகுசு கார். நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வெளிப்பிரகாரமான கிரிப்பிரகாரத்தில் எந்தவித கார்களும் வருகை தர அனுமதி கிடையாது.

கோவிலுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் வருகை தந்தால் கூட அவர்கள் தங்கியுள்ள இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து பேட்டரி கார் மூலம் கோவில் வாசலில் இறங்கி தரிசனம் செய்து விட்டு அதே பேட்டரி காரில் ஏறி செல்வார்கள்.

ஆனால் இன்று காலையில் சொகுசு கார் ஒன்று கிரிபிரகாரத்தின் வடக்கு பகுதியான வள்ளி குகை பாதை வழியாக வந்துள்ளது. மேலும் அந்த கார் கிழக்கு கிரிபிரகாரம் வரை சென்று விட்டு திரும்பியுள்ளது.

கோவில் கிரிபிரகாரத்தில் கார்கள் கொண்டு வருவது ஆகம விதிகளுக்கு எதிரானது. இருந்தும் இன்று அதிகாலையில் வந்த கார் யாருடையது? அதில் வந்த நபர் யார் என்று கோவில் நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Response