கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என்று ஒரு முழுநீளப் பட்டியலை டி.ராஜேந்தரின் திரைப்படங்களில் பார்க்க முடியும். ஆனால், அதை மிஞ்சுவது மட்டும் இன்றி, யோசித்து பார்க்க முடியாதபடி, தொழில்நுட்பம் மட்டும் இன்றி படத்தில் இடம்பெறும் அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் தானே நடித்து, படத்தின் பின்னணி வேலைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தானே செய்து, தனி மனிதராக ஒரு முழுப்படத்தையும் உருவாக்கியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
ஹாலிவுட் உள்ளிட்ட உலகின் எந்த ஒரு சினிமாவிலும் மேற்கொள்ளப்படாத ஒரு சாதனைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, உலகையே வியப்பில் ஆழ்த்தும் விதத்தில் இப்படத்தை தனி மனிதராக உருவாக்கியிருக்கும் சங்ககிரி ராஜ்குமார், அதற்கான கதைக்களம் மற்றும் காட்சிகளை கையாண்ட விதம் பிரமிக்க வைக்கிறது.
கார் சேசிங், ஹெலிகாப்டர் சாகசம், ரயில் சாகசம், விமானப் பயணம் என்று பல்வேறு பிரமாண்டமான காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் மேற்கொண்டிருந்தாலும், அதற்கான பின்னணியில் தனி ஒருவராக மிக கடுமையான உழைப்பை கொடுத்திருப்பது திரையில் தெரிகிறது.
நான்கு நண்பர்கள் மற்றும் கார் ஓட்டுநர் ஒருவர் என ஐந்து குழுவின் பயணத்தில் தொடங்கும் கதை, மனிதனின் பேராசையால் ஒரு உயிரினம் கூட இல்லாமல் உலகம் அழிந்துவிடும் ஒரு கண்டுபிடிப்பின் ரகசியம் தெரிய வருகிறது. அதை பயன்படுத்தி 10 நாட்கள் உலகையே ஆள வேண்டும் என்று ஆசைப்படும் நான்கு நண்பர்களின் ஆசை நிறைவேறியதா ?, யாரும் இல்லாத உலகில் தனி ஆளாக வாழ துடிக்கும் நாயகனின் ஆசையின் பின்னணியில் எத்தகைய ஆபத்து இருக்கிறது, என்பதை விவரிப்பது தான் கதை.
இப்படி ஒரு கதையை வைத்துக் கொண்டு உலகம் முழுவதும் பயணிக்கும் முயற்சியை அமெரிக்காவோடு முடித்துக் கொண்டு மீண்டும் தமிழகம் நோக்கி பறக்கும் ஒரு பயணத்தின் மூலம் கதையை முடிக்கும் சங்ககிரி ராஜ்குமாரின், இத்தகைய சாதனை முயற்சியை தமிழ் சினிமா மட்டும் அல்ல, ஒட்டு மொத்த இந்திய சினிமாவே கொண்டாட வேண்டும்.
Ratings: 3.5/5
Pro : Nikil Murugan




