Sattendru Maaruthu Vaanilai Movie Review

கதை : ஐடி கம்பெனியில் வேலை செய்யும் சந்துரு (ஜெய் )தனி ஆளாக ஆசிரமத்தில் வளர்ந்தவன். அவருக்கு மந்திரி மகள் ஜானகி (மீனாட்சி) மீது காதல் பிறக்கிறது. ஒரு சமயத்தில் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கின்றனர். திடீரென்று மீனாட்சி காணாமல் போகிறாள். அவளை கொன்றுவிட்டதாக சந்துரு மீது பழி விழ சந்துருவை போலீஸ் கைது செய்கிறது. உண்மையில் நடந்தது என்ன? சந்துரு தான் ஜானகியை கொன்றானா என்ற கேள்விகளுக்கு சஸ்பென்ஸ் திரில்லருடன் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

விஜய் ரசிகராக ஜெய் இப்படத்தில் நடித்திருக்கிறார். முதல் பாதி படம் வரை அவர் விஜய் போலவே ஸ்டைல்கள் செய்து நடிப்பது ரசிகர்களை குதூகலப்படுத்தும். நடனம் ஆக்ஷன் காட்சிகளிலும் விஜய் பாணியிலேயே நடித்திருக்கிறார். இது எந்த அளவுக்கு ஜெய்க்கு கைகொடுக்கும் என்பது இனிமேல் தான் தெரிய வரும். ஆனால் ஜெய்க்கென்று ஒரு பாணி எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, சுப்பிரமணியபுரம் போன்ற படங்களில் உருவாக்கி வைத்திருக்கிறார். அதெல்லாம் கூட ஜெய்க்கு நன்றாகவே கை கொடுத்திருக்கிறது. திடீரென்று அவர் விஜய் பாணிக்கு மாறியது விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் அவரது இடத்துக்கு முயற்சிக்கிறாரா அல்லது இதே பாணியை தொடர போகிறாரா என்ற கேள்வி எழுப்பியிருக்கிறது .

ஹீரோயின் மீனாட்சியுடன் ஜெய் நெருக்கமாக நடித்து மீனாட்சி காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டினாலும் உருக்கமான காட்சிகளில் எதார்த்தமாக நடித்து மனதில் இடம் பிடிக்கிறார்.

யோகி பாபு கொஞ்சம் நெகட்டிவ் கதாபாத்திரம், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் காதல் என்று கலாட்டா செய்திருக்கிறார்.

கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், ஆதித்ய கதிர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஏ ஆர் முருகதாஸிடம் பணியாற்றிய பாபு விஜய் படத்தை இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட தனது குரு பாணியிலேயே ஆக்சன் சஸ்பென்ஸ் திரில்லர் காதல் செண்டிமெண்ட் என எல்லா அம்சங்களையும் கலந்துகட்டி படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு காதல் படம் என்று மட்டுமில்லாமல் மற்றொரு ஷாக் ஆன விஷயத்தையும் கதையில் மையப் பொருளாக அமைத்திருப்பது அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

பி வி பிரேம்ஸ் படத்தை தயாரித்திருக்கிறது.

கிரிஷ்
கோபாலகிருஷ்ணன் இசை பாடல்களை ரசிக்க வைத்திருக்கிறது. மாண்டேஜில் ஒலிக்கும் பாரதி பாடல் விறுவிறுப்பு கூட்டுகிறது

ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு ரிச்சாக இருக்கிறது.

சட்டென்று மாறுது வானிலை – ஆக்சன் திரில்லர்

சஸ்பென்ஸ் என ஆர்வத்தை தூண்டுகிறது.

Ratings: 4/5

Pro : Aim Sathish

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *