ரத்ன குமார் இயக்கத்தில், விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் வெளியாகி இருக்கும் ’29’ (2026) திரைப்படம், காதலின் எதார்த்தமான பக்கத்தையும், பிரிவால் ஏற்படும் வலியையும் பேசும் ஒரு மனதிற்கு இதமான காதல் படமாகும்.
மேயாத மான் பட பாணியில், யதார்த்தமான நடிப்பால் இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து, விருதுகளை வெல்லத் தகுதியானது என விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
29 வயது இளைஞனின் காதல் மற்றும் சுய-கண்டறிதலைப் பற்றியது.
நடிப்பு: விதுவின் யதார்த்தமான நடிப்பு, காதலின் வலியை நன்றாகப் பிரதிபலிக்கிறது, ப்ரீத்தி அஸ்ரானியின் நடிப்பு மற்றும் கெமிஸ்ட்ரி சிறப்பாக உள்ளது.
இயக்கம்: ரத்ன குமாரின் இயக்கம் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
இசை: சீன் ரோல்டனின் இசை படத்திற்கு வலு சேர்க்கிறது.
மெதுவான, ஆனால் உணர்வுபூர்வமான திரைக்கதை.யதார்த்தமான கதாபாத்திரங்கள்.பாடல்கள் மற்றும் பின்னணி இசை.
சுருக்கமாக ரத்ன குமார் பாணியில் ஒரு நேர்த்தியான காதல் கதை, திரையரங்கில் பார்க்கக்கூடிய ஒரு சிறந்த அனுபவம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அவினாஸ், காதல் தோல்வியில் புலம்புவது மட்டும் இன்றி அவ்வபோது இறுக்கமான சூழல்களை விலக்கி, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டியலக்ஷ்மி, நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் சிந்து ஷியாம் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு மறந்து போன கடற்கரை காதல் மற்றும் பேருந்து காதலை நினைவுப்படுத்துவதோடு, காதலர்கள் கடந்து செல்லும் பாதைகள், பயணித்த இடங்களையும் ரசிக்க வைத்திருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் காதலின் கொண்டாட்டத்தையும், காதலின் வலியையும் பார்வையாளர்கள் மனதில் எளிதில் கடத்தி விடுகிறது. மெதுவாக பயணித்தாலும் காட்சிகளை ரசிக்க வைக்கும் விதத்தில் பின்னணி இசை உணர்வுப்பூர்வமாக பயணிக்கிறது.
காதலும், காதலர்களின் பயணம் மட்டுமே கதை என்றாலும், அதை தொய்வின்றி நகர்த்தி சென்றிருப்பதோடு, திரைக்கதை மற்றும் காட்சிகளில் இருக்கும் காதல் உணர்வுகளை படம் பார்ப்பவர்களிடத்தில் கடத்தும் விதமாகவும் காட்சிகளை சிறப்பாக தொகுத்திருக்கிறார் ஆர்.எஸ்.சதீஷ் குமார்.
எளிய மக்களின் காதலை எதார்த்தமாக மட்டும் இன்றி இனிமையாகவும், வலிமையாகவும் சொல்லுவதில் ஏற்கனவே தன்னை நிரூபித்த இயக்குநர் ரத்னகுமார், இந்த முறை ஒருபடி மேலே சென்று காதல் கொண்டாட்டத்தோடு, அதை தாண்டிய வாழ்க்கை ஒன்று இருக்கிறது, என்ற அறிவுரையை அழகாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கிறார்.
காதலுக்கும், கடற்கரைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது தெரிந்தது தான், ஆனால் அந்த கடற்கரையில் மறைந்திருக்கும் ஒரு அற்புதமான இடத்தையும், அதில் நாயகன் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியின் மூலம் கடற்கரை காதலுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.
என்னதான் உருகி உருகி காதலித்தாலும் கடைசியில் காமத்தில் தானே முடியும், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருந்தாலும், காட்சி மொழியில் அதை மிக நாகரீகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், காதல் பற்றியும், ஆண் – பெண் பாலினம் மற்றும் எதார்த்தமான வாழ்க்கை பற்றி தன் கூர்மையான மற்றும் நேர்மையான வசனங்கள் மூலம் சொல்லி கைதட்டல் பெறுகிறார்.
மொத்தத்தில், ‘29’ காதலர்களை மட்டும் அல்ல காதலிக்க மறந்து போனவர்களையும் கொண்டாட வைக்கும்.
RATINGS: 4.5/5
Pro S2 Sathish Media
CAST :
1. VIDHU AS SATHYA
2. PREETHI ASRANI AS VIJI
3. AVINASH AS MANI
4. MASTER MAHENDRAN AS SANTHOSH
5. KIRAN AS VASANTH
6.SINDHU SHYAM AS VIJI AMMA
6. PREMKUMAR AS KURUNILA KATHIRAVAN
7. AATHIRA PANDIYALAKSHMI AS PANDIYALAKSHMI
8. AARUMUGAVEL AS HERO FATHER
9. SHEHNAZ FATHIMA AS JAANU
10. SA .SATHISHKUMAR AS HERO FRIEND
11. SHALINI AS AMRUTHA
12. PRIYANKA RAI AS BABY
13. PRADEEP AS SANTHOSH FATHER
14. ANUSRIVELAN AS COLLECTOR
CREW :
1. PRODUCTION HOUSE : STONE BENCH STUDIO & G SQUAD
2. PRODUCED BY – KAARTHIKEYAN.S & LOKESH KANAGARAJ
3. WRITTEN & DIRECTED BY – RATHNA KUMAR
4. DOP – MADHESH MANICKAM
5. EDITOR – R S SATHISH KUMAR
6. ART – SHANMUGARAJ
7. MUSIC – SEAN ROLDAN
8. LYRICS – UMA DEVI , BAKKIYAM SHANKAR, MOHAN RAJA, RATHNA KUMAR, SEAN ROLDAN
9. STUNTS – DON ASHOK
10. CHOREOGRAPHER – LEELAVATHI, SHERIFF M
11. COSTUMER – RAVI DEVARAJ
12. COSTUME DESIGNER – PRAVEEN RAJA
13. SOUND DESIGNS – T UDHAYAKUMAR, KEWYN FREDERICK
14. VFX – HOCUS POCUS
15. DI – G B COLORS
16. MAKEUP – VINOTH
17. CO-DIRECTOR – MADHAN KUMAR
18. CHIEF ASSOCIATE – VIGNESH RAVICHANDRAN
19. PRODUCTION EXECUTIVE – ASHOK NARAYANAN
20. STILLS – HARI SHANKAR
21. PRO – SATHISH S2 MEDIA
22. PUBLICITY DESIGNS – VYAKI
25. CO.PRODUCER – ALANGAR PANDIYAN ,KALYAN SUBRAMANIAN, PRADEEP KUMAR BOOPATHI ,
19. PRODUCTION EXECUTIVE – MADHAN SHANMUGAM , R.RAJKUMAR
TAMILNADU THEATRICAL RELEASE – WHITE CARPET FILMS.




