கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது.. இலக்கியத் துறையில் உயரிய விருதை பெறும் 3வது தமிழர்.
பாடல் ஆசிரியர் கவிஞர் வைரமுத்துவுக்கு, நாட்டின் இலக்கியத் துறையில், மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது..
தமிழ் இலக்கியத் துறையில் இதுவரை 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள்.
தற்போது தமிழகத்திலிருந்து 3வது கவிஞராக ஞானபீட விருதினை வைரமுத்து பெறுகிறார்.
வைரமுத்து பெற்ற விருதுகள்..
1972ஆம் ஆண்டு, வைகறை மேகங்கள் என்ற முதல் கவிதை நூலை வெளியிட்டவர்.. மேலும் 100+ கவிதைத் தொகுப்புகளையும், நாவல்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
திரைப்படங்களில் 7,700க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார்.
தேசிய விருதினை வைரமுத்து இதுவரை ஏழு முறை பெற்றிருக்கிறார். அதிகபட்சமாக 7 தேசிய விருதுகளை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்ற பெருமை இவருக்கு உண்டு..
கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற இலக்கியப் படைப்புக்காக சாகித்திய அகாதெமி விருதினையும் மிக உயர்ந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான சாதனா சம்மான் என்ற விருதினையும் பெற்றுள்ளார் கவிஞர் வைரமுத்து..
Jnanpith Award for Lyricist Vairamuthu 3rd Tamil writer to receive honour.
Lyricist and author Vairamuthu has been selected for the Jnanpith Award, the nation’s highest literary honour. He is the third Tamil literary figure to receive the award, after a gap of 20 years. Earlier recipients include the late writers Akilan and Jayakanthan.



