GANDHI KANNADI MOVIE REVIEW

GANDHI KANNADI MOVIE REVIEW :

இயக்குநர் ஷெரீப் இயக்கத்தில் கேபிஒய் பாலா ஹீரோ பாலாவாக அறிமுகமாகியுள்ள படம் தான் காந்தி கண்ணாடி. செப்டம்பர் 5ம் தேதியான இன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் பல படங்கள் வெளியாகின்றன. தமிழில் சிவகார்த்திகேயனின் மதராஸி, வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட் கேர்ள் படங்களுடன் முதல் படத்திலேயே பாலா தில்லாக மோதுகிறார். படத்தில் பாலா ஹீரோ கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டாலும், முழுக்க ஹீரோயிசம் மற்றும் நல்லவன் வேஷம் எல்லாம் போட்டு நடிக்காமல், யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது ரொம்பவே சிறப்பாக உள்ளது.

காந்தி கண்ணாடி படத்தின் டைட்டிலில் இருந்தே படத்தின் நாயகனாக ரசிகர்களை ஈர்க்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். ஆரம்பத்தில் இருந்தே நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள பாலா கடைசியில் ஹீரோவாக மாறினாரா? இல்லையா? என்பது குறித்த விமர்சனத்தை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க.. காந்தி கண்ணாடி கதை: ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்துக்கொண்டு தினமும் தனது மனைவி அர்ச்சனா சமைத்துக் கொடுக்கும் தயிர் சாதத்தையும் புளி சாதத்தையும் சூப்பர் என பாராட்டும் காதல் உள்ள கணவர் கதாபாத்திரத்தில் காதல் படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் வாழ்ந்திருக்கிறார். தனது மனைவி அர்ச்சனாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் அவர், ஒருமுறை 60ம் திருமணம் ஒன்றுக்கு செல்லும் போது, அந்த திருமணத்தை பார்த்த அர்ச்சனாவுக்குத் தங்கள் 60-வது திருமணத்தை கொண்டாட வேண்டும் என்ற ஆசை எழுகிறது. ஆனால், குழந்தைகள் இல்லாத நிலையில், எப்படி நடத்துவது என்ற குழப்பத்தில் இருக்கும் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக பணத்தாசை பிடித்த பாலாவை சந்திக்கிறார். பாலாஜி சக்திவேலை ஏமாற்றி பணத்தை கறக்க நினைக்கும் பாலாவின் பேராசை ஜெயித்ததா? அல்லது மனைவி விருப்பப்பட்ட மாதிரி 60ம் கல்யாணத்தை கிராண்டாக பாலாஜி சக்திவேல் நடத்தினாரா? இல்லையா? என்பது தான் இந்த காந்தி கண்ணாடி படத்தின் கதை.

Cast

RATINGS : 3/5

Leave a Response