Manithargal Movie Review : Wacky making; But overwhelming emotion; Are these people close to heart or not

Manithargal Movie Review :

ஓர் இரவு, ஐந்து நண்பர்கள், ஒற்றைச் சம்பவம், அதைத் தொடர்ந்து நடக்கும் பதைபதைப்பு நிறைந்த சம்பவங்கள் போன்றவற்றை த்ரில்லர் மோடில் ‘ராவாக’ சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.

அசத்தல் மேக்கிங்; ஆனால் அதீத எமோஷன்; மனதிற்கு நெருக்கமாகிறார்களா இந்த மனிதர்கள்?

திண்டுக்கல்லைச் சேர்ந்த கர்லி (கபில் வேலவன்), சதீஸ் (தக்‌ஷா), மனோ (குணவந்தன் தனபால்), தீபன் (அர்ஜுன் தேவ்), சந்திரன் (சம்பா சிவம்), பிரேம் ஆகிய ஆறு நண்பர்களும், நடு இரவில் குடிபோதையில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

இதில் எதிர்பாராதவிதமாக, மது பாட்டில் குத்தி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுகிறார் பிரேம். இந்தக் கொலைக்கு யார் காரணம் என நண்பர்களுக்குள் வாக்குவாதமும் சண்டையும் வருகின்றன, என்ன செய்வதென்று தெரியாமல், பிதற்றத் தொடங்கும் நண்பர்களை ஆசுவாசப்படுத்தி, பிரேமின் உடலைத் தங்களுடைய கார் டிக்கியில் மறைக்கிறார் கர்லி.

நடு இரவில் அங்கிருந்து கிளம்பும் நண்பர்கள், பிரேமின் உடலை என்ன செய்தார்கள், போலீஸிடம் மாட்டினார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கியிருக்கும் ‘மனிதர்கள்’.

Ratings : 2.5/5

PRO Aim Sathish

Leave a Response