உறவுகளுக்கு வணக்கம் 🙏
நான் சினிமா துறையில் ஒரு சில விருதுகளைப் பெற்றிருந்தாலும், சமூக ஆர்வலராக பல விருதுகளைப் பெற்றுள்ளேன். இன்று என் கலை மற்றும் சமூக களப்பணிக்காக, சர்வதேச அளவில் நடைபெற்ற நோர்வே தமிழ் திரைப்பட விருது விழாவில் எனக்கு “கலைமகன் 2025” விருது வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த விருதை நோர்வே நாட்டின் ஒஸ்லோ மேயர் திரு அமீனா மெபல் ஆண்ட்ரசன் மற்றும் நம் ஈழத்தமிழர் வசீகரன் ஆகியோர் கைகளால் வாங்கியது எனக்கு பெருமை, இதை உலகத் தமிழர்களின் பாராட்டாக நான் கருதுகிறேன். இந்த சந்தோசமான நிகழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி 🙏🤗
இந்த விருது எனக்கு புதிய உத்வேகத்தையும் புத்துணர்ச்சியும் கொடுத்து இருக்கிறது. எனக்குக் கிடைத்த இந்த விருதை, உலகெங்கும் உள்ள நேர்மையான இயற்கை விவசாயிகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
#SoundaraRaja


